AIBDPA தமிழ் மாநிலச் செயலாளர் தோழர் R. ராஜசேகர் சொந்த வேலையாக திருச்சி வந்துள்ளார். நமது தோழர்களை சந்திக்க இன்று காலை BSNL அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
அப்போது நமது AIBDPA தோழர்கள் அவரை சந்தித்து பென்ஷன் ரிவிஷன் மற்றும் மெடிக்கல் பில் பட்டுவாடா சம்பந்தமான சந்தேகங்களை விவாதித்தனர். மாநிலச் செயலர் அதற்கான விளக்கத்தை கொடுத்து, மெடிக்கல் பில் பிரச்சனையில் மாவட்ட சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். இதை தொடர்ச்சியாக செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
திடீர் கூட்டமாக இருந்தாலும் தோழர்கள் கணிசமாக வந்தது நல்ல விஷயம்.
0 Comments