01-09-2022ல் நடைபெற்ற AIBDPA தமிழ்மாநில மையக் கூட்டத்தின் முடிவுகள்
September 04, 2022
01-09-2022ல் நடைபெற்ற AIBDPA தமிழ்மாநில மையக் கூட்டத்தின் முடிவுகள்
தோழர்களே ! 01-09-2022 அன்று நமது AIBDPA சங்கத்தின் மாநில மையக் கூட்டம் நடைபெற்றது. தோழர்கள் சி. கே. நரசிம்மன் மாநில தலைவர், ஆர். ராஜசேகர் மாநில செயலாளர், எஸ். நடராஜா மாநில பொருளாளர், பி.மாணிக்க மூர்த்தி மாநில துணைத் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:-
1) நமது சங்கத்தின் மூன்று கட்ட போராட்டத்தின் முத்தாய்ப்பாக மிகச் சிறப்பாக வெற்றிகரமாக நடைபெற்ற 24-08-2022 அன்றைய டெல்லி பேரணியில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து தோழர்கள் தோழியர்கள் மற்றும் அதற்கான எல்லா முயற்சிகளையும் செய்த மாவட்ட சங்கங்கள், மாநில சங்கத்தின் நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், மத்திய சங்க நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில மையத்தின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
மாநில மையத்தின் சார்பில் நிர்ணயித்த கோட்டாவினை பூர்த்தி செய்யாத மாவட்டங்கள் அது குறித்து தகுந்த கூட்டங்களில் விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
2) சொசைட்டி பிரச்சினையில் நமது மாநில சங்கத்தின் வரவேற்கக் கூடிய ஒரு நிகழ்வாக 24-08-2022 அன்று Cooperative Central Registrar, New Delhi. அவர்களை சந்தித்து நமது கோரிக்கை மனுவினை சமர்ப்பிப்பித்து அதன் மீது நடவடிக்கை வேண்டி வலியுறுத்தி வந்தது சொசைட்டி பிரச்சினையில் குறிப்பிடத்தக்க ஒரு முன்னேற்றமாகும். அதனைத் தொடர்ந்து
A) நமது சங்கத்தின் கடிதத்தின் மீது நடவடிக்கை தாமதமானால் Email Compaign நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
B) ஊழியர்களின் பணம் கிடைக்க மற்றொரு முயற்சியாக நீதிமன்றம் செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இது மாநில செயற்குழுவில் இறுதி செய்யப்படும்.
மேற்கண்ட தொடர் நடவடிக்கைகளில் சொசைட்டி பிரச்சினையில் ஈடுபடுவது என்று மாநில மையம் முடிவு செய்துள்ளது.
3) அடுத்த நமது சங்கத்தின் மாநில செயற்குழுவினை 22-09-2022 அன்று மதுரை மாவட்ட சங்கத்தின் விருப்பப்படி மதுரையில் நடத்துவது என்று இறுதிபடுத்தப்பட்டது.
பயணப்படி குறித்து மதுரை மாவட்ட சங்கம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதில் ஏற்படும் பற்றாக்குறையை ஒருசில மாவட்டங்கள் உதவியுடன் ஈடுகட்டுவது.
வருங்காலத்தில் மாவட்ட செயற்குழுக்களை நடத்த முன்வரும் மாவட்ட சங்கங்கள் அதற்கான பயணப்படியினையும் வழங்குவது தான் சரியானது என்றும் முடிவு செய்யப்பட்டது.
4) நமது மத்திய மாநில சங்கங்களின் தொடர்ந்த போராட்டங்கள் மற்றும் முயற்சிகளின் காரணமாக 31-03-2022 வரையான மெடிக்கல் பில் மற்றும் மருத்துவ மனைகளுக்கான Inpatient (உள் நோயாளி சிகிச்சைக்கான) பணம் வந்துள்ளது.
மாவட்ட சங்கங்கள் அதில் கவனம் செலுத்தி ஊழியர்களுக்கு முழுமையாக பணம் சென்று சேர அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் A) அனைத்து பில்களும் ERPயில் முழுமையாக ஏற்றப்பட்டுள்ளதா என்று கவனித்து ஏற்றப்படவில்லை என்றால் அதனை ஏற்றுவதற்கும் தலமட்டங்களில் நிர்வாகத்தை சந்தித்து அதற்கான முயற்சிகளை மாவட்ட சங்கங்கள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
B) மெடிக்கல் பில் மாவட்டங்களுக்கு வந்த பில்களின் பணம் ஊழியர்களுக்கு கொடுக்கப்படாமல் திரும்பி வருவதாக கடந்த முறை தகவல்கள் உள்ளன. எனவே மாவட்ட சங்கங்கள் அது குறித்து மாவட்ட நிர்வாகத்தை சந்தித்து அதன் விபரம் அறிந்து அவற்றை ஊழியர்களுக்கு பணம் சென்று சேர்வதற்கான முயற்சிகளையும் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
மெடிக்கல் பில் குறித்த தற்போதைய முன்னேற்றம் முழுமையாக நமது தொடர் போராட்டங்களாலும் முயற்சிகளாலும் தான் கிடைத்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. எனவே மாவட்ட சங்கங்கள் உடனடியாக வாயிற் கூட்டங்களின் மூலமாக நமது மத்திய, மாநில சங்கங்களின் போராட்டங்கள் மற்றும் முன்னேற்றம் பற்றி ஊழியர்கள் மத்தியில் விளக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
நமது ஒன்றுபட்ட முயற்சிகளும் போராட்டங்களும் என்றும் வீண் போகாது .
தோழமையுடன், ஆர்.ராஜசேகர், மாநில செயலாளர், AIBDPA, தமிழ் மாநிலம். 04-09-2022
0 Comments