ஓய்வூதியர்களுக்கான மருத்துவ பயனளிப்பு - BSNL CMDக்கு AIBDPA பொதுச்செயலாளர்
கடிதம் !
August 31, 2022
BSNL CMD க்கு AIBDPA பொதுச்செயலாளர் கடிதம் !
தோழர்களே !
நமது பொதுச்செயலர் தோழர். K.G.ஜெயராஜ், BSNL நிர்வாகத்திற்கு 31.08.2022ல் மருத்துவ பலன்கள் சம்பந்தமாக எழுதிய கடிதத்தின் முக்கிய அம்சங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.
BSNL CMD திரு. புர்வார் அவர்களுக்கு வந்தனங்களுடன் கடிதம் ஆரம்பிக்கின்றது. மெடிக்கல் பில்கள் 31.03.2022 வரை உடனே தீர்த்து வைக்க எடுத்த முயற்சிகளையும், வரும் மாதம் முதல் பணியில் இருப்பவர்களுக்கு இணையாக ஓய்வு பெற்ற ஊழியர்களின் பில்களும் அவ்வப்போது தீர்க்கப்படும் என்ற உறுதி மொழிக்கும் நன்றி என்று தொடங்குகிறது.
முக்கியமான மூன்று பிரச்சினைகளைப் பேசுகிறது கடிதம்.
1. மெடிக்கல் பில்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறதே தவிர, மெடிக்கல் அலவன்ஸ் (non – voucher) வாங்குபவர்களுக்கு எந்த வித நிதியும் ஒதுக்கப்படவில்லை. இது வேறொரு விதமான சமத்துவமின்மையை ஓய்வு பெற்றவர்களிடம் ஏற்படுத்தி, சங்கடங்களை அதிகமாக்கும் என்று எண்ணுகிறோம். ஏற்படுத்தும். அதை அனுமதிக்க வேண்டாம்.
2. மேற்கண்ட தீர்வுகளில் மெடிக்கல் பில், அலவன்ஸ் இரண்டிலும் VRS 19 ஓய்வூதியர்கள் ஒதுக்கப்படுகிறார்கள் என்று எண்ணுகிறோம். எனவே அவர்களுக்கான பில்களையும் செட்டில் செய்யும்படி கோரிக்கை வைக்கிறோம்.
3.ஓய்வு பெற்ற பணியாளர்களில் சிலர் CGHS முறைக்கு விருப்பம் தெரிவித்துச் சென்றுள்ளனர். அவர்களுக்கு நிலுவையில் உள்ள பில்களைத் தருவதில், சற்று தொழில் நுட்பத் தடங்கல்கள் உள்ளன. அவற்றைச் சீர் செய்து அவர்களுக்குச் சேரவேண்டிய தொகையை அனுப்ப நடவடிக்கை எடுக்கவும்.
மேற்கண்ட விஷயங்களை நமது பொதுச்செயலர் CMD க்கு எழுதியுள்ள கடிதத்தில் விவரித்து உள்ளார்.
தோழமையுடன்
R.ராஜசேகர். மாநிலச் செயலர்
MEDICAL BENEFITS TO BSNL RETIREES – CHQ WRITES TO CMD, BSNL.
Dear Comrades,
As you are aware BSNL Corporate office has issued a letter on 30-08-2022 on allotment of funds to clear the medical reimbursement bills of BSNL pensioners upto 31-03-2022. However, the letter is silent about payment of without vouchers Medical Allowance. Further there are complaints about non consideration of VRS 2019 retirees for payment of Medical benefits. It is also a fact that the CGHS migrated pensions are not getting the payments due to some technical snag which is continuing for a long time. Therefore CHQ has written to the CMD BSNL for his intervention for resolution of these issues.
0 Comments