24-08-22ல் நடைபெற்ற AIBDPA டெல்லி பேரணியில் தமிழக தோழர்களின் எழுச்சிமிக்க
பங்களிப்பு !!.
August 26, 2022
பிஎஸ்என்எல் ஓய்வூதியர்களின் விடிவெள்ளியாம் AIBDPA டெல்லி பேரணியில் தமிழக தோழர்களின் எழுச்சிமிக்க பங்களிப்பு.:-
பென்ஷன் மாற்றம் பிரச்சனையில் வரலாற்று மைல்கல்
டெல்லி ஜன்பத் சாலையை குலுக்கிய சஞ்சார்பவன் நோக்கிய எழுச்சிப் பேரணி
பேரணியில் பங்கேற்று சிறப்பித்த தோழர்கள் அனைவருக்கும் தமிழ் மாநிலச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் !!
தோழர்களே ஜூன் 22 ஆர்ப்பாட்டம், ஜூலை 20 தார்ணா என வெற்றிகரமாக இயக்கங்களை நடத்தியதை போல் டெல்லி பேரணி இயக்கத்தையும் ஆர்வத்துடன் உற்சாகமாய் நடத்தி முடித்து போர் பரணி பாடி, வெற்றிக் களிப்போடு தமிழகம் திரும்பிக் கொண்டிருக்கும் உங்கள் அனைவரையும் தமிழ் மாநிலச் சங்கம் மனதாரப் பாராட்டுகிறது.
பெரும் முயற்சி எடுத்து பேரணியில் கலந்து கொண்ட தோழர்களுக்கு இரு கரம் கூப்பி நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது மாநிலச் சங்கம்.
மூன்று மாத காலமாய் நடைபெற்ற 3 கட்ட போராட்டத்தின் நிறைவாக டில்லி பேரணி 24.08.22
எதிர்பார்ப்பை மிஞ்சிய அணிதிரட்டல்
டெல்லி ஈஸ்டர்ன் கோர்ட் வளாகம் ஓய்வூதியர்களால் நிரம்பி வழிந்தது. எங்கு நோக்கினும் செங்கொடிகளும் பேனர்களும், கோரிக்கை அட்டைகளும், ஆப்ரான்களும், கோரிக்கை வாசகம் அடங்கிய ஆப்ரான்கள், தொப்பிகள் என போராட்டம் கோலாகலமாக களை கட்டியது.
தோழர் நம்பூதிரி தலைமையில் பேரணி, தோழர் சிந்து சிஐடியு துவக்கி வைக்க தோழர் அபிமன்யு GS பிஎஸ்என்எல் இ யூ, அஞ்சல் ஆர் எம் எஸ் ஓய்வூதிய சங்கம் தோழர் K.ராகவேந்திரன், தோழர் கே கே என் குட்டி என்சிசிபிஏ ,தோழர் ஆர் என் பராஸ்கர் மகா சம்மேளனம், தோழர் அனிமேஷ் மித்ரா காண்டாக்ட் ஊழியர் அகில இந்திய சங்கம் வாழ்த்துரை வழங்க இறுதியாக தோழர் முரளிதரன் நாயர் ஏஜிஎஸ் நன்றி கூற, பேரணிக் கூட்டம் முடிவடைந்தது.
டெல்லியில் 144 தடைச் சட்டம் உள்ளதாலும் டிசிபி தலைமையில் ஒரு பெரும் போலீஸ் படை அனைத்து வழிகளையும் தடுத்து விட்டதாலும் ஊர்வலம் அலுவலக வளாகத்துக்குள் எழுச்சியுடன் நடைபெற்றது. கோரிக்கை மனுவை தொலைத்தொடர்பு மந்திரி, DOT செகரட்டரி பிஎஸ்என்எல் CMD ஆகியோரிடம் தோழர் நம்பூதிரி தலைமையிலான குழு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் இருந்து 180 க்கும் மேற்பட்ட நமது உறுப்பினர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து 220க்கும் மேற்பட்டோர் இப்பேரணியில் கலந்து கொண்டனர்.
நமது மாநில சங்கத்தின் சார்பாக சுற்றறிக்கை போஸ்டர் பேனர் என சிறப்பாக ஏற்பாடுகள் செய்தோம். ஊர்வலத்தில் 100 ஆப்ரான்களும், 100 கொடிகளும், முகப்பு பேனருடன் நமது 220 பேர் படை கலந்து கொண்டது
எங்கு நோக்கினும் ஆப்ரன் அணிந்த நமது தமிழக தோழர்கள் உலா வந்தனர். தமிழகம் தனது தனித்துவத்தை பேரணியில் பறைசாற்றியது.
மூன்று மாதமாய் ஓய்வின்றி உழைத்தோருக்கு நன்றி நன்றி
மூன்று மாத காலத்தில் நாம் நடத்திய மைய நிர்வாகிகள் கூட்டம், மாநில செயற்குழுவை போல் நடைபெற்ற மாவட்டச் செயலர்கள் கூட்டம், கிடைத்த ஆலோசனைகள் நமது நிலையை மேலும் மேம்படுத்தியது. இயக்கத்தை மெருகேற்றியது.
இயக்கத்தை வெற்றி பெற உழைத்த மாநில சங்க நிர்வாகிகள், மத்திய சங்க நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், மாவட்ட செயலர்கள், கிளைச் செயலாளர்கள், அனைத்து பகுதி நிர்வாகிகள், அனைவருக்கும் மாநிலச் சங்கம் நன்றி பாராட்டுகிறது. தலமட்ட ஊழியர்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் இந்த வெற்றியில் பிரதிபலிக்கிறது. குறிப்பாக சென்னையில் இருந்து இவ்வியக்கங்களின் தயாரிப்புகளில் முழுமையாக பங்கேற்ற மாநில தலைவர் தோழர் சி கே நரசிம்மன், மாநில பொருளாளர் தோழர் S.நடராஜா, மாநில உதவி செயலர் தோழர் S. அன்புமணி, மாநில உதவி தலைவர் தோழர் P. மாணிக்கமூர்த்தி ஆகியோருக்கும் சென்னை மாவட்ட தோழர்கள் கோதண்டம் தோழர் சிரில் ராஜ், தோழர் கன்னியப்பன் ஆகியோருக்கும், நோட்டீஸ் போஸ்டர் அனுப்புவதற்கு நமக்கு முழு ஒத்துழைப்பு நல்கிய தோழர் கே. சீனிவாசன் ஏ சி எஸ் பிஎஸ்என்எல் இ யூ அவர்களுக்கும் நாம் நம்முடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
டெல்லி பேரணியில் தமிழகத்தின் தனித்துவத்தை பறைசாற்றிய தோழர் P. ராமருக்கு சிறப்பு பாராட்டுக்கள்.
தோழர்களே ! டில்லி பேரணியில் தமிழகத்தின் சார்பாக 100 ஆப்ரன்கள் மூலம் நமது தனித்துவத்தை வெளிப்படுத்திருந்தோம். இது பேரணியில் சிறப்பாக பரிணமித்தது. இதனை வடிவமைத்து தயாரித்து தூத்துக்குடியில் இருந்து பல்வேறு சிரமங்களுக்கு இடையில் டெல்லி வரை கொண்டு வந்த தோழர். P. ராமர், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் சிறப்பான பாராட்டுதலுக்கு பொருத்தமானவர்.
(தமிழகம் 100, சென்னை தொலைபேசி 16)
தோழர். P. ராமர் அவர்களுக்கு மாநில சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
நமக்கு வழிகாட்டிய தோழர் S. மோகன் தாஸ் மத்திய சங்க துணை துணைத் தலைவர் அவர்களுக்கும், பல்வேறு ஆலோசனைகள் வழங்கிய தோழர்.S. செல்லப்பா AGS BSNLEU ஆகியோருக்கும் நமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அனைத்து தொழிற்சங்க இயக்கங்களிலும் தமிழகம் முன்னணி படையாக விளங்குவது போல் பிஎஸ்என்எல் பென்சனர் இயக்கத்திலேயும் நமது தனி முத்திரைய நாம் பதிப்போம்.
வாழ்த்துக்களுடன், ஆர் ராஜசேகர் மாநிலச் செயலாளர் 25/08/2022.
0 Comments