AIBDPAவின் சக்தி வாய்ந்த மற்றும் எழச்சியுடன் நடைபெற்ற சஞ்சார் பவன் பேரணி !!
August 25, 2022
AIBDPA ன் சக்தி வாய்ந்த மற்றும் எழச்சியுடன் நடைபெற்ற சஞ்சார் பவன் பேரணி !!
செவ்வணக்கம் தோழர்களே !
24-08-2022 அன்று சஞ்சார் பவன் வரையிலான பேரணி என்ற மூன்றாம் கட்ட போராட்டமானது மற்ற இரண்டு நிகழ்ச்சிகளைப் போலவே அபரிமிதமான வெற்றியைப் பெற்றதில் CHQ மகிழ்ச்சி கொள்கிறது. ஒப்பீட்டளவில் பலவீனமான வட்டங்களின் பங்கேற்பு என்பது எதிர்பார்ப்பைவிட அதிகமாக இருந்தது.
புதுடெல்லியிலுள்ள Eastern Court BSNL/MTNL கட்டிட பெரிய வளாகமானது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்ட போராட்ட வீரர்களால் நிரம்பி வழிந்தது.அவர்கள் ஏந்தி வந்த ஏராளமான பதாகைகள், மற்றும் கொடிகள் பேரணியை கவர்ந்தது.
பேரணிக்கு முன்பாக Eastern courtல் ஆகஸ்டு 24 காலை10.30க்கு ஒரு கூட்டம் நடைபெற்றது. AIBDPA மூத்த தலைவரும், ஆலோசகருமான தோழர். VAN நம்பூதிரி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். தோழர். ஆர். எஸ். சௌகான், AGS போராட்டத்தின் கோரிக்கைகளின் மீது விளக்கவுரையாற்றினார். தோழர். சஞ்சிப் பானர்ஜி, AGS அனைவரையும் வரவேற்றார். தோழர். வி. ஏ. என். நம்பூதிரி தனது தலைமை உரையில் கோரிக்கைகள் மற்றும் AIBDPA நடத்திய இயக்கங்கள் எடுத்த நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்களை விளக்கினார்.
சிஐடியுவின் தேசிய செயலாளரும், அகில இந்திய அங்கனவாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளருமான ஏ ஆர் சிந்து, மோடி அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை முழுமையாக அம்பலப்படுத்தும் வகையில் எழுச்சியூட்டும் உரையாற்றியதோடு AIBDPA சங்கத்தின் அனைத்து இயக்கங்களுக்கும் CITU ஆதரவளிக்கும் என உறுதியளித்து கூட்டத்தை துவக்கி வைத்தார்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் ஆர் என் பராஷர், BSNLEU பொதுச் செயலாளர் P.அபிமன்யு, NCCPA பொதுச் செயலாளர் கே கே என் குட்டி, AIPRPA பொதுச் செயலாளர் & Regional Co-Ordinator of TUI (பி&ஆர்) K.ராகவேந்திரன் மற்றும் அனிமேஷ் மித்ரா, பொதுச் செயலாளர், BSNLCCWF ஆகியோர் உரையாற்றினார்கள். தோழர். முரளீதரன் நாயர், AGS நன்றியுரை வழங்கினார்.
உடல்நலக் குறைவால் பங்கேற்க முடியாத AIBDPA தலைவர் தோழர்.அனந்த குமார் பட்டாச்சார்ஜி மற்றும் பொதுச் செயலாளர் தோழர்.கே.ஜி.ஜெயராஜ் ஆகியோரின் செய்திகளை தோழர்.வி.ஏ.என். நம்பூதிரி வாசித்தார்.
கூட்டத்திற்குப் பிறகு சஞ்சார் பவனுக்கு செல்லும் பேரணியானது, உடனடி ஓய்வூதியத் திருத்தம், நிலுவையில் உள்ள மருத்துவக் கட்டணங்கள் மற்றும் உதவித்தொகை போன்றவற்றை உடனடியாக வழங்கக் கோரி தோழர்களின் முழக்கங்களுடன் தொடங்கியது. தோழர். வி ஏ என் நம்பூதிரி, ஆலோசகர், ஆர் முரளீதரன் நாயர் AGS, டி பாசு AGS, எம் ஆர் தாஸ், AGS மற்றும் பிற தலைவர்களின் தலைமையில் பேரணி ஆரம்பம் ஆகியது. ஆனால் சாலையின் அனைத்து வாயில்களையும் பூட்டி காவல் துறையினர் அணிவகுப்பைத் தடுத்தனர். மேலும் துணை ஆணையர் தலைமையில் ஏராளமான போலீஸார் சாலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர். மேலும் 144 தடையுத்தரவு ஏற்கனவே உள்ளதால் தலைநகரின் முக்கிய சாலைகள் வழியாக அணிவகுப்பை அனுமதிக்க முடியாது என்று கூறினர். எனவே கட்டிட வளாகத்தின் வளாகத்தில் மட்டுமே நடத்த வேண்டியிருந்தது.
பிரச்சனைகளை உள்ளடக்கிய கோரிக்கை மனு தோழர். V.A.N நம்போதிரி தலைமையிலான குழுவினரால் மாண்புமிகு தகவல் தொடர்பு அமைச்சர், DoT மற்றும் CMD, BSNL ஆகியோரிடம் சமர்ப்பிக்கப்பட்டு, கோரிக்கைகளின் மீது உடனடி தீர்வும் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியானது மறக்கமுடியாத மற்றும் மிகவும் வெற்றிகரமான நிகழ்வாக AIBDPA மட்டுமல்ல, நாட்டின் ஒட்டுமொத்த ஓய்வூதிய இயக்கங்களின் வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாகும்.
இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட BSNL, டெலிகாம் ஓய்வூதியதாரர்கள் பங்கேற்ற இந்த ஊக்கமளிக்கும் பேரணியானது, AIBDPAவின் வலிமையை வெளிப்படுத்தியது. சந்தேகத்திற்கு இடமின்றி, இது சங்கத்தினை, ஓய்வூதியர்களை மேலும் உயரத்திற்கு முன்னேற்ற உதவும்.
பொதுச்செயலாளர் டெல்லியில் இல்லாத நிலையில், தோழர். ஆர் முரளீதரன் நாயர், ஏஜிஎஸ், டி ஏ. பிஜு, அலுவலகச் செயலர், பிஎஸ்என்எல்இயு, ஆர் எஸ் சௌஹான் ஏஜிஎஸ், டிபிஎஸ் ஷிஷோடியா, தில்லி வட்டச் செயலர், தோழர்.வி ஏ என் நம்பூதிரியின் வழிகாட்டுதலின் மூலம் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திறம்படச் செய்தனர்.
மேற்கண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பங்கேற்பாளர்கள் மற்றும் பங்கேற்பு மற்றும் ஊக்கமளிக்கும் உரைகளை வழங்கிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்களுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம்.
தோழமையுடன் தோழர். கே.ஜி.ஜெயராஜ், பொதுச் செயலாளர் AIBDPA
0 Comments