மாநில மாவட்ட அளவில் கருத்தரங்குகள் / கையெழுத்து இயக்கத்தை வலுவாக நடத்துவோம் !!
November 14, 2021
மாநில மாவட்ட அளவில் கருத்தரங்குகள் / கையெழுத்து இயக்கத்தை வலுவாக நடத்துவோம் !!
ORGANISE CIRCLE AND DISTRICT LEVEL CONVENTIONS & SIGNATURE CAMPAIGN AGAINST NATIONAL MONETISATION PIPELINE.
Dear Comrades,
CHQ heartily congratulate all of you for successfully organising the Demonstration on 09-11-2021, the first program called by the Co-Ordination Committee of BSNLEU AIBDPA AND BSNL CCWF against the National Monetisation Pipeline.
Now, we have to hold the Circle and District level conventions and also gather maximum signatures from the employees, Pensioners, workers and the general public against the sinister move of the government. So please get in touch with the other constituents of the Co-Ordination Committee and plan for successful implementation in a time bound manner.
Comrades, selling out the hard earned national assets at throw away prices by the Modi government is nothing but the most anti-national measures and needs to be resisted with all our united strength. So let us make the campaign programme a stupendous success.
With warm greetings,
K G Jayaraj General Secretary.
தோழர்களே,
மத்திய சங்க அறைகூவலுக்கு ஏற்ப, கடந்த 09.11.2021 அன்று வெற்றிகரமாக நாடெங்கும் கூட்டுப் போராட்டங்களை சிறப்பாக நடத்தியதற்கு அனைவருக்கும் பாராட்டுக்கள். தேசிய பணமயமாக்கல் திட்டத்திற்கு எதிராக நம் BSNLEU, AIBDPA, BSNL CCWF கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதற்கு வாழ்த்துக்கள்.
நம் அடுத்த திட்டத்தின் படி, ஊழியர்களிடம் (சங்க உறுப்பினர்களிடம்), பொதுமக்களிடம் இவ்விஷயங்களைச் சென்று சேர்க்க வேண்டும். அதற்காக கருத்தரங்குகள் மாநில, மாவட்ட மட்டங்களில் நடத்தப்பட வேண்டும். தவிர, கோரிக்கைகளை விளக்கி, பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கி, எதிர்ப்பு இயக்கங்கள் கட்டமைக்கப்பட வேண்டும். அரசின் கெடுமதியான முடிவுகளை, இதன் மூலம் ஊழியர்களுக்கு, ஓய்வு பெற்றவர்களுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு எதிரான அரசின் முயற்சிகள் தடுக்கப்பட வேண்டும். மற்ற சக சங்கங்களை இதில் கலந்து ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
தோழர்களே ! மோடி அரசின் இத்தகைய பொதுத்துறை நிறுவனங்களை மிகக்குறைந்த மதிப்பில் தனியார் மயமாக்குதல் என்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. நம் ஆயிரமாயிரம் கரங்கள் கொண்டு தடுக்கவும் வேண்டும். எனவே மேற்சொன்ன போராட்ட இயக்கங்களை வெற்றிகரமாக நடத்த உறுதி ஏற்போம்.
வாழ்த்துகளுடன், K. G. ஜெயராஜ். பொதுச்செயலர் AIBDPA.
தோழர்களுக்கு வணக்கம். நமது பொதுச்செயலர் சுற்றறிக்கையின் தமிழாக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. BSNLEU, TNTCWU சங்கங்களுடன் இணைந்து இவ்வியக்கங்களை வெற்றிபெற செய்திட வேண்டுகிறோம். இவண் என்.குப்புசாமி மாநில செயலர் AIBDPA
0 Comments