சிறப்பாக நடைபெற்ற குமரி மாவட்ட குழித்துறை கிளையின் அமைப்பு மாநாடு !
கன்னியாகுமரி மாவட்ட குழித்துறை புதிய கிளையின் அமைப்பு மாநாடு கடந்த 09-11-2021 அன்று தக்கலையில் உள்ள மாநில அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் வைத்து AIBDPA குமரி மாவட்டத் தலைவர் தோழர். K. காளிபிரசாத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் தோழர். A. மீனாட்சி சுந்தரம் வரவேற்று, புதிய கிளை உருவாக்கம் பற்றி எடுத்து கூறியதோடு அதன் புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து உரையாற்றினார். AIBDPA தமிழ் மாநில உதவித் தலைவர் தோழர். V. P. இந்திரா கிளை மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
குழித்துறை கிளையின் புதிய கிளைத் தலைவராக தோழர். எஸ். ஹரிதாஸ் கிளைச் செயலாளராக தோழர். கே. வேலப்பன் கிளைப் பொருளாளராக தோழர். எ. ராஜகோபாலன் உட்பட 15 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். .
0 Comments