Latest

10/recent/ticker-posts

உற்சாகமாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் கிளை பொதுக்குழு கூட்டம் !!

உற்சாகமாக நடைபெற்ற தூத்துககுடி மாவட்ட திருச்செந்தூர் கிளையின் பொதுக்குழு கூட்டம் !!

     தூத்துக்குடி மாவட்ட AIBDPA திருச்செந்தூர் கிளையின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் புதிய கிளைச் சங்க நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் இன்று 16-11-2021 காலை 11மணி அளவில் திருச்செந்தூர் பாரதியார் தெருவில் உள்ள TRS நினைவகத்தில் வைத்து மாவட்ட உதவித் தலைவர் தோழர். A. சந்திரசேகர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரையும் மாவட்ட உதவிச் செயலர் தோழர். V. குணசேகரன் வரவேற்றார். மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தியதோடு சிறப்புரை ஆற்றினார். கீழ்கண்ட தோழர்கள் திருச்செந்தூர் பகுதி கிளை நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்மனர்.

கிளை தலைவர் :  K. வெள்ளைச்சாமி

உதவித்தலைவர்கள் : 

P. கோபால் நடேசன்
S. ஜெயா
R. மைக்கேல் சற்குணர்

கிளைச் செயலர் :  P. முருகப் பெருமாள்

உதவிச் செயலர்கள் :

M. பிச்சையா 
A. பரமசிவம் 
K . சுப்பிரமணியன் – I

கிளைப் பொருளாளர் :  I. ஜெபமணி

அமைப்புச் செயலர்கள் : 

S. இளங்கோவன்
V. தங்கராஜ்
B. பகவதிபாண்டியன்
R. மல்லிகா 
T. ஶ்ரீராகவன்

ஆடிட்டராக தோழர்.K. கனகதுரை  துரைசிங் நியமிக்கப்பட்டார்.

         மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன், மாவட்ட உதவிச் செயலர் தோழர். P. அய்யாபிள்ளை, மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். P. ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊழியர்களின் சந்தேகங்களுக்கு மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் பதில் அளித்தார். நிறைவாக கிளைச் செயலர் தோழர். P. முருகப் பெருமாள் நன்றி கூறினார்.

       சிறப்பாக ஏற்பாடு செய்து கிளைகூட்டம் நடத்திட்ட திருச்செந்தூர் பகுதி தோழர்களையும் புதிய கிளைச்சங்க நிர்வாகிகளையும் மாவட்ட மாநிலச் சங்கங்கள் மனதார பாராட்டி வாழ்த்துகிறது.

Post a Comment

0 Comments