நமது சங்கத்தின் மாநில மையக்கூட்டம் கடந்த 11-10-2021 அன்று செல் கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது. மையத் தோழர்கள் ஐவரும் கலந்து கொண்டனர்.
மையக்கூட்ட முடிவுகள் பின்வறுமாறு :-
19-11-2021 திருச்சி மாநிலச் செயற்குழுவிற்கு கீழ்கண்ட தோழர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைப்பது.
1) ஆர். இராஜசேகரன், சென்னை 2) எஸ். அன்புமணி, சென்னை 3) எஸ். தமிழ்மணி, சேலம் 4) டி.கே. பிரசன்னா, சேலம் 5) எஸ். முத்துசாமி, திருநெல்வேலி 6) எம். பெருமாள்சாமி, விருதுநகர்
22-10-2021 – BSNLEU, AIBDPA, TNTCWU சார்பாக சென்னையில் நடக்கும் போராட்டத்திற்கு மாவட்டங்கள் தங்களுக்கு நிர்ணயித்த கோட்டா அடிப்படையில் நமது உறுப்பினர்களை சென்னைக்கு அழைத்துவர வேண்டும். சென்னை மீனம்பாக்கம் பயிற்சி மையத்தில் உறுப்பினர்களை தங்க ஏற்பாடுகள் செய்வது. AIBDPA தமிழ் மாநிலச் சங்கத்திற்கு ஒதுக்கப்பட்ட 200பேர் கோட்டாவை நிறைவேற்ற மாவட்டச் செயலாளர்களும் மாநிலச் சங்க நிர்வாகிகளும் அனைத்து முயற்சிகளும் எடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.
26-10-2021 தூத்துக்குடி மாவட்ட மாநாடும் 27-10-2021 திருநெல்வேலி மாவட்ட மாநாடும் முடிவு செய்யப்பட்டு சிறப்பாக வேலைகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது 28-11-2021 அன்று மதுரை மாவட்ட மாநாடும், 29-11-2021 அன்று நாகர்கோவில் மாவட்ட மாநாடும் நடத்த மாநிலச் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து மாவட்ட மாநாடுகளையும் 31-12-2021க்குள் நடத்த மாநில மையம் முடிவு செய்துள்ளது. மாவட்ட மாநாட்டிற்கு முன் கிளை மாநாடுகள் நடத்தவும், புதிய கிளைகள் ஏற்படுத்தவும் வேண்டும்.
21-10-2021 – 13வது AIBDPA அமைப்பு தினத்தை மிகவும் சிறப்பாக கொண்டாட வேண்டும். அகில இந்திய சங்கத்தின் சுற்றறிக்கையை தமிழாக்கம் செய்து வெளியிட்டு உள்ளோம்.
இந்த சுற்றறிக்கை எல்லா உறுப்பினர்களிடமும் எடுத்துச் செல்ல வேண்டும். உறுப்பினர்கள் இல்லாதவர்களிடமும் கொண்டு சென்று அவர்களை வென்றெடுக்க வேண்டும். 10,000 உறுப்பினர்கள், 100 கிளைகள் அடைய அனைவரும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். நம்மால் முடியும் ! ஏனெனில் நமது கே.ஜி. போஸ் பாதை சரியானது. அகில இந்திய அளவில் 1 லட்சம் உறுப்பினர்களுக்கு மேல் உள்ள சங்கம் AIBDPA சங்கம், BSNL ஓய்வூதியர் சங்கங்களில் முதன்மைச் சங்கம் AIBDPA. அதேபோல் தமிழகத்திலும் AIBDPA சங்கத்தை வளரதெடுக்க பாடுபடுவோம்.
தோழமை வாழ்த்துக்களுடன்,
தோழமையுடன் N. குப்புசாமி மாநிலச் செயலர் ஈரோடு 18-10-2021.
0 Comments