சிறப்பாக நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த பொது குழு கூட்டம் !!
October 19, 2021
சிறப்பாக நடைபெற்ற தஞ்சாவூர் மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த பொது குழு கூட்டம் !!
அனைவருக்கும் வணக்கம் தோழர்களே !
18.10.2021அன்று இரவு 07.30 மணியளவில் on lineல் நமது தஞ்சாவூர் AIBDPA மாவட்ட சங்கத்தின் விரிவடைந்த பொது குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர் P.பக்கிரிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாநில தலைவர் தோழர் C.K.நரசிம்மன், மாநில பொருளாளர் தோழர் S.நடராஜா, மாநில உதவி செயலாளர் மாடக் குளம் செல்வராசன், தஞ்சாவூர் BSNLEU மாவட்ட செயலாளர் தோழர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் தோழர்.பாலசுப்பரமணி, தூத்துக்குடி மாவட்டம் செயலாளர் தோழர். P. ராமர், கும்பகோணம் மாவட்ட செயலாளர் தோழர். R. பக்கிரிநாதன் மற்றும் நமது மாவட்ட சங்கத்தின் பொருளாளர் தோழர் S.N.செல்வராஜ், மாவட்ட சங்கத்தின் உதவி செயலாளர் தோழர். K.பிச்சைக்கண்ணு உள்ளிட்ட 15 மேற்பட்ட தோழர்கள் ஆன்லைனில் கலந்து கொண்டனர். முன்னாள் மாவட்ட செயலாளர் தோழர் பன்னீர் செல்வம் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில உதவி செயலாளர் தோழர் மதுரை செல்வராசன் கூட்டத்தின் நோக்கத்தினை விளக்கினார். நிரப்பப்படவேண்டிய மாவட்ட செயலாளர் பதவிக்காக, மாவட்ட தலைவர் தோழர் பக்கிரிசாமி தோழர் K.பிச்சைக்கண்ணு அவர்களின் பெயரை முன்மொழிந்தார். மாவட்ட சங்கத்தின் பொருளாளர் தோழர் SN.செல்வராஜ் வழிமொழிந்தார். மாவட்ட செயலாளராக தோழர் K. பிச்சைக்கண்ணு தேர்வு பெற்றதாக மாவட்ட தலைவர் அறிவித்தார். மேலும் மாநில சங்கத்தின் வழிகாட்டலின் படி மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் கொண்ட “மாவட்ட மையம்” அமைக்கப்பட்டது என மாவட்ட தலைவர் அறிவித்தார். கலந்து கொண்ட தோழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
மாநில தலைவர் தோழர் C.K.நரசிம்மன், மாநில பொருளாளர் தோழர் S. நடராஜா, மாநில உதவி செயலாளர் மாடக் குளம் செல்வராசன், BSNLEU மாவட்ட செயலாளர் தோழர் மகேந்திரன், மாவட்ட பொருளாளர் தோழர் பாலசுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட தோழர்களின் தனிநபர் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களின் பிரச்சினைகளை கேட்டு தீர்வு கண்டு உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு திட்டமிட்டு உரிய முயற்சிகள் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. புதிய மாவட்ட செயலாளர் தோழர் K.பிச்சைக்கண்ணு அவர்கள் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.
தோழமையுடன் P.பக்கிரிசாமி மாவட்ட தலைவர், தஞ்சாவூர்.
0 Comments