Latest

10/recent/ticker-posts

உற்சாகமாக நடைபெற்ற ஈரோடு மாவட்ட கிளை சங்க மாநாடுகள்.

உற்சாகமாக நடைபெற்ற ஈரோடு மாவட்ட கிளை சங்க மாநாடுகள்.







       20.10.2021 இன்று ஈரோட்டில் ஈரோடு நகரில் உள்ள கிளைகளின் இணைந்த மாநாடு சிறப்பாக நடைபெற்றது. சங்க கொடியை தோழர். P. தியாகராஜன் ஏற்றி வைக்க மாநாடு துவங்கியது. கிளை தலைவர்கள் தோழர். N. M. செல்வராஜ் மற்றும் தோழர். N. ராமசந்திரன் ஆகியோர் கூட்டு தலைமையில் நடைபெற்றது. கிளை செயலாளர் தோழர். நடராஜன் அவர்கள் அஞ்சலி தீர்மானத்தை முன் மொழிய அஞ்சலி செலுத்துப்பட்டது. கிளை செயலாளர் தோழர் மாணிக்கம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

       கிளைகளின் கூட்டு மாநாட்டை மாவட்ட செயலாளர் தோழர். ராஜமாணிக்கம் அவர்கள் துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் தோழர். சிவஞானம், மாநில துணை செயலாளர் தோழர். L. பரமேஸ்வரன் ஆகியோர் மாநாட்டினை வாழ்த்தி பேசினார்கள்.

             மாநாட்டின் அமைப்பு நிலை மற்றும் பொருளாய்வுக் குழுவை மாவட்ட துணைச் செயலாளர் தோழர். P.
சின்னசாமி அவர்கள் துவக்கி வைத்தார். உறுப்பினர் எண்ணிக்கை மற்றும் தேவை அடிப்படையில் ஈரோடு S.1, மற்றும் S. 2 கிளைகளை இரண்டாக பிரிக்க வேண்டும் என்ற அந்த கிளை செயலாளர்கள் முன் மொழிவிற்கு மாநாடு ஒப்புதல் அளித்தது.

          பின்னர் எட்டு கிளைகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. புதிய நிர்வாகிகள் தேர்வை மாநில அமைப்பு செயலாளர் தோழர். C. பரமசிவம் நடத்தி வைத்து வாழ்த்துரை வழங்கினர். மாநில செயலாளர் தோழர். N. குப்புசாமி மாநாட்டில் கலந்து கொண்டு நிறைவுரை நிகழ்த்தினார்.

                நிறைவாக தோழர். ரபிக் அவர்கள் நன்றி கூறினார். மாநாட்டில் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர் விஸ்வநாதன், தோழர் கோவிந்தராஜ் மற்றும் தோழர் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

              எட்டு கிளைகளிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மாவட்ட  மாநில சங்கங்களின் சார்பில் வாழ்த்துக்கள்.

Post a Comment

0 Comments