Latest

10/recent/ticker-posts

எழுச்சியுடன் நடைபெற்ற நெல்லை மாவட்ட 4வது மாவட்ட மாநாடு

எழுச்சியுடன் நடைபெற்ற நெல்லை மாவட்ட 4வது மாவட்ட மாநாடு !




















 

                 திருநெல்வேலி மாவட்ட AIBDPA சங்கத்தின் 4வது மாவட்ட மாநாடு 27-10-2021அன்று நெல்லை தியாகராஜநகர் CITU அலுவலகம் மின்வாரியச் சங்ககட்டிடத்தில் தோழர் D.கோபாலன் நினைவரங்கி வைத்து வெகு சிறப்பாக நடைபெற்றது.

    மாவட்டத் தலைவர் தோழர் S.முத்துசாமி அவர்கள் தலைமை தாங்கினார். காலை 1030 மணிக்கு முதல் நிகழ்வாகத் தேசியக் கொடியை முன்னாள் மாநில உதவித் தலைவர் தோழர். S. தாமஸ் அவர்களும், சங்கக் கொடியை அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S.மோகன்தாஸ் அவர்களும் விண்ணதிரும் கோஷங்களுகிடையே ஏற்றி வைத்தார்கள். பின்னர் தியாகிகள் ஸ்தூபிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

       

          மாவட்டத் தலைவர் தோழர் . S. முத்துசாமி அவர்களின் தலைமை உரைக்குப் பின் மாவட்ட செயலர் தோழர். M. கனகமணி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் S.சங்கரநாராயணன் அஞ்சலி உரையாற்றினார். மாநிலத் தலைவர் தோழர். C .K.நரசிம்மன் அவர்கள் மாநாட்டைத் துவக்கி வைத்து உரையாற்றினார்.


            மாநாட்டில் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் S.மோகன்தாஸ் அவர்கள் “தேச வளர்ச்சியில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்களிப்பும், இன்றைய பாதிப்புகளும்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். நெல்லை மாவட்ட DGM (Admin) உயர்திரு S. கிருஷ்ணகுமார் அவர்கள் மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாநிலப் பொருளாளர் தோழர் S. நடராஜா அவர்கள் சிறப்புரையாற்றினார்.             

             தொடர்ந்து மின்வாரிய ஓய்வூதியர் நலச்சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் S. ராஜாமணி, நமது மாநில உதவித் தலைவர் தோழர் V. S. வேம்புராஜா, தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர் P. ராமர், சென்னை மாவட்டத் தலைவர் தோழர். C. சுவாமிகுருநாதன், முன்னாள் மாநிலத் துணைத் தலைவர் தோழர் S. தாமஸ் ஆகியோரும் மாநாட்டை வாழ்த்திப் பேசினர.

         தொடர்ந்து ஆண்டறிக்கையை மாவட்ட உதவிச் ரசெயலாளர் தோழர் A. பிச்சுமணி வாசித்தார். வரவு செலவு கணக்கை மாவட்டப் பொருளாளர் தோழியர். V. சீதாலட்சுமி அவர்கள் வாசித்தார். தொடர்ந்து நடைபெற்ற அமைப்பு நிலை விவாதத்தில் தென்காசி கிளைச் செயலர் தோழர் K. கணேசன், வள்ளியூர் கிளைச் செயலர் தோழர் A. பிச்சுமணி, அம்பை கிளைச் செயலர் தோழர் S. P. கணேசன் மற்றும் சங்கரன்கோவில் கிளைச் செயலர் தோழர் D. கிறிஸ்டோபர் ராஜதுரை ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அதனைத் தொடர்ந்து விவாதங்களுக்கு பதிலளித்த பின்னர்  செயல்பாட்டு அறிக்கை மற்றும் நிதி நிலை அறிக்கை ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

   

       புதிய நிர்வாகிகள் தேர்தலை மாநிலத் தலைவர் தோழர் CKN நடத்தினார். மாவட்ட மாநாட்டில் புதிய நிர்வாகிகளாக மாவட்டத் தலைவராக தோழர். M. கனகமணியும், மாவட்டச் செயலராக தோழர். S.முத்துசாமியும், மாவட்டப் பொருளாளராக தோழியர். V. சீதாலட்சுமியும் ஏகமானதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

            மாவட்ட மாநாட்டில் மூத்த தோழர் S. சுந்தரராஜன் அவர்கள் தனது 70 வதாவது பிறந்த நாளை முன்னிட்டு மதிய உணவு மற்றும் காலை மாலை Tea செலவு ஆகியவற்றை ஏற்றுக் கொண்டார்.தோழர் S.சுந்தரராஜன் அவர்களுக்கு மாவட்ட மாநாட்டில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

              நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழியர். V.சீதாலட்சுமி அவர்கள் நன்றி கூற மாநாடு இனிதே நிறைவு பெற்றது.

      சிறப்பான ஏற்பாடுகளை செய்து மாவட்ட மாநாட்டை நடத்திய மாவட்டச் சங்க நிர்வாகிகளையும் தேரந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளையும் மாநிலச்சங்கம் மனதார பாராட்டி வாழ்த்துகிறது.

Post a Comment

0 Comments