05-10-2021ல் வீறுகொண்டு போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !!
October 04, 2021
05-10-2021ல் வீறுகொண்டு போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !!
தோழர்களே!
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி BSNLEU, AIBDPA & TNTCWU சார்பாக 05-10-2021 அன்று நடக்கும் போராட்டத்தை எழுச்சியுடன் நடத்த மாவட்ட சங்கங்கள், கிளைச் சங்கங்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும்.
18 மாவட்ட சங்கத்திலும் போராட்டம் நடைபெற வேண்டும். 60 கிளைச் சங்கங்களும் முழுமையாக பங்கேற்க வேண்டும். 25 மாநில சங்க நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், கிளைச்சங்க நிர்வாகிகள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். தீவிர பிரச்சாரம் செய்ய வேண்டும்.
AUAB போராட்டம் ஒரு பக்கம் , நமது ஒருங்கிணைப்புக் குழு போராட்டம் மறுபக்கம். இதன் விளைவாக BSNL நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு, AUAB தலைவர்களை அழைத்துள்ளது. போராட்டத்தை மேலும் முன்னெடுத்து செல்வோம் !!
15 அம்ச கோரிக்கைகளை வெல்லும் வரை போராடுவோம் ! வெற்றி பெறுவோம் !!
0 Comments