Latest

10/recent/ticker-posts

உற்சாகமாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் !

உற்சாகமாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் ! 

 


       AIBDPA தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் தூத்துக்குடி மாசிலாமணிபுரம் 3வது தெருவில் உள்ள தோழர். P.C.வேலாயுதம் அரங்கில் வைத்து 21.09.2021 காலை 11 மணி அளவில் மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட உதவித் தலைவர் தோழர். P. அய்யாபிள்ளை அஞ்சலி உரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் தலைமையுரை ஆற்றினார். அவர் தனது உரையில் இன்றைய போராட்டங்களில் நமது சங்க செயல்பாடுகளையும் மேல்மட்ட அளவில் தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் கள போராட்டங்களையும் விளக்கி பேசினார். வரும் மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்கவேண்டும் எனவும் கூறினார்.
         மாவட்டச் செயலர் P. ராமர் வரவேற்புரையோடு செயல்பாட்டு அறிக்கையை முன் வைத்து உரையாற்றினார். செயல்பாட்டு அறிக்கை மூலம் நடைபெற்ற இயக்கங்களை தெளிவாக கூறினார். மேலும் நமது மாவட்டத்தில் மாவட்டமையம், BSNLEU, AIBDPA, TNTCWU சங்கங்களின் இணைப்புக்குழு அமைப்பது, 2022க்கு காலண்டர் போடுவது, மாவட்ட மாநாட்டை சிறப்பாக நடத்துவது, மாநிலத் தலைவர்களை அழைப்பது, நெல்லை, நாகர்கோவில், விருதுநகர் மாவட்டச் செயலர்களை அழைப்பது, மாவட்ட, மாநில, அகிய இந்திய மாநாட்டு செலவினங்களுக்கு தேவையான நிதியினை அனைவரும் வழங்கிட திட்டமிடுவது, 5-10-21, 22-10-21 போராட்டங்களை சிறப்பாக நடத்துவது பற்றி குறிப்பிட்டார்.


        AIBDPA அகில இந்திய துணைத்தலைவர் தோழர். S. மோகன்தாஸ் செயற்குழுவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை மாற்றுவது, தேசிய பணமாக்கல் மூலம் பொதுத்துறை விற்பனையை எதிர்ப்பதும், மற்றும் கடந்த பத்து மாதங்களாக டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் அதனை ஆதரிக்கும் விதமாக வரும் 27-9-21 நடைபெறும் பாரத் பந்த்தில் நமது பங்களிப்பு, சுயமாக செயல்படவேண்டிய தேர்தல் ஆணையம், உளவுத்துறை, வருமான வரித்துறை போன்றவைகளை அரசின் கைப்பாவையாக செயல்படுத்துவது தொடர்ந்து வேதனை அளிப்பதாகவும், நமது உரிமைகளை பெற மத்திய மாநில சங்க போராட்ட செயல்பாடுகளை விரைவுபடுத்துவது உள்ளிட்ட விபரங்களை எடுத்துரைத்தார். அனைத்து மாவட்டச் சங்கத்தோழர்களும் விவாதத்தில் பங்கு கொண்டு ஏகமனதாக செயல்பாட்டு அறிக்கையை ஏற்றுக் கொண்டனர். 1968 வேலைநிறுத்தில் சிறப்பான பங்களிப்பை செலுத்திய தோழர். S. மோகன்தாஸூக்கு மூத்த  தோழர் மாவட்ட ஆலோசகர் தோழர். T. K. ஶ்ரீனிவாசன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.


       மேலும் 2022க்கான காலண்டர் போடுவதை மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் அறிவித்ததை தொடர்ந்து மாவட்ட ஆலோசகர் தோழர். T. K. ஶ்ரீனிவாசன் அதற்கான செலவிற்கு ரூபாய். 5000/- நன்கொடை வழங்கினார்.
தேபோல் மாவட்ட, மாநில, அகிய இந்திய மாநாட்டு செலவினங்களுக்கு தேவையான நிதியினை அனைவரும் வழங்கிட திட்டமிடவேண்டும் என மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் அறிவித்ததை தொடர்ந்து கூட்டத்திலேயே மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் மாநாட்டுச் செலவிற்கு ரூபாய். 5000/- நன்கொடை வழங்கினார். அதனை தொடர்ந்து மாவட்ட உதவித் தலைவர் தோழர். M. முத்தையா, மாவட்ட அமைப்புச் செயலர் தோழர். K. ராமகிருஷ்ணன் ஆகியோர் தலா ரூபாய். 1000/- நன்கொடை வழங்கினர். அனைவருக்கும் மாவட்டச் சங்கத்தின் சார்பில் மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் நன்றி கூறினார். மதிய உணவு ஏற்பாட்டு செலவை மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் ஏற்றுக்கொண்டார்.
மாவட்ட மையத்திற்கு மாவட்டச் செயலர் தோழர். P. ராமர், மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன், மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன், மாவட்ட ஆலோசகர் தோழர். T. K. ஶ்ரீனிவாசன், திருச்செந்தூர் கிளைத் தலைவர் தோழர். A. சந்திரசேகர் ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தின் நிறைவாக மாவட்டப் பொருளாளர் தோழர். K. கணேசன் நன்றி கூறினார்.

 



Post a Comment

0 Comments