சிறப்பாக நடைபெற்ற மதுரை மாவட்டச் செயற்குழு கூட்டம் !
மதுரை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தோழர். S. ஜான் போர்ஜியா அவர்கள் தலைமையில் இன்று 22.09.2021 காலை 11.00 மணிக்கு மதுரை தொலைபேசி நிலைய வளாகத்தில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. மதுரை மாவட்ட செயலாளர் தோழர். N. உத்திரகுமார் வரவேற்புரை ஆற்றினார்.
அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் சிறப்புரையாற்றினார். AIBDPA மாநில உதவி செயலாளர் தோழர். M.மாடக் குளம் செல்வராசன், தோழர். S. செல்வின் சத்தியராஜ், மாவட்ட செயலாளர் BSNLEU, தோழர். சோனை முத்து மாவட்ட செயலாளர் TNTCWU ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கீழ்க்கண்ட முடிவுகள் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
1) மதுரை தெற்கு, வடக்கு, பழநி கிளை மாநாடுகள் முறையே 13.10.2021, 16.10.2021 & 20.10.2021 தேதிகளில் நடத்துவது, திருமங்கலம் கிளை மாநாடு, கிளைத் தோழர்களை கலந்து பேசி தேதி குறிப்பது.
2) மதுரை மாவட்ட மாநாடு நவம்பர் 12, 13, 14 தேதிகளில் மாநில சங்கத்தின் ஒப்புதல் பெற்று ஏதாவது ஒரு நாள் மதுரையில் நடத்துவது, மாவட்ட மாநாட்டிற்கு நிதியாக ரூபாய் 500/- பெறுவது என்றும் முடிவு எடுக்கப்பட்டது.
தோழர் சண்முகவேல் நன்றி கூற செயற்குழு கூட்டம் நிறைவு பெற்றது. மதுரை மாவட்டச் செயற்குழுவை சிறப்பாக நடத்திய மாவட்டச் சங்க நிர்வாகிகளை மாநிலச்சங்கம் மனதார பாராட்டுகிறது.
0 Comments