Latest

10/recent/ticker-posts

ஏற்றமுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட செயற்குழுக்கூட்டம்

ஏற்றமுடன் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட செயற்குழுக்கூட்டம் 




     விருதுநகர் மாவட்ட AIBDPAவின் மாவட்டச் செயற்குழுக்கூட்டம் 24.09.2021- Friday அன்று காலை 10.45 முதல் மதியம் 01.45 வரை விருதுநகரில் உள்ள M.R.V. நினைவரங்கத்தில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். G. செல்வராஜ் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. தோழர். M.பெருமாள்சாமி  மாவட்ட பொருளாளர்
அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர். K. புளுகாண்டி மாவட்ட உதவி செயலாளர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

    மாவட்டத் தலைவர் தோழர். G. செல்வராஜ் தலைமையுரை யாற்றியதோடு நிகழ்ச்சி நிரலை வாசித்து ஒப்புதல் வாங்கினார். அதன்பின் அனைத்திந்தியத் துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் செயற்குழுவை துவக்கிவைத்து பல்வேறு விஷயங்களை எடுத்துரைத்தார்.

           அதன்பின் மாவட்டச் செயலாளர் தோழர். M.அய்யாசாமி நிகழ்ச்சி நிரலை விளக்கிப் பேசினார். மேலும் இரண்டு மாத காலத்திற்கான செயல்பாட்டு அறிக்கையை சமர்பித்துப்பேசினார். பல தோழர்கள் செயல்பாட்டு அறிக்கையை பாராட்டியும் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிட்ட விசயங்களைப் பற்றியும் பேசினர்.

           அதன்பின் மாவட்டச் செயலர் மாவட்ட மாநாடு நடத்துவதுப் பற்றிய கருத்துக்களை எடுத்துரைத்தார். அவை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி விருதுநகர் மாவட்டச் சங்க மாநாட்டை நவம்பர் இறுதியில் மாநில செயலாளர் அவர்கள் குறிப்பிடும் தேதியில், விருதுநகரில் M.R.V. அரங்கத்தில் ஒருநாள் மாநாடாக நடத்துவது என்றும் மாநாட்டு நன்கொடையாக தலா Rs..500/- வீதம் உறுப்பினர்களிடமிருந்து பெறுவது,
மாவட்டச்சங்க நன்கொடை ரசீது புத்தகத்தை பயன்படுத்திக்கொள்வது,
அனைத்து உறுப்பினர்களுக்கும் மாநாட்டின்போது நினைவுப்பரிசு வழங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
      மாநில செயலர் தவிர மற்ற சிறப்பு பேச்சாளர்களை பின்னர் முடிவு செய்வது என்றும் மேலும் கீழ்க்கண்ட முடிவுகளும் ஏகமனதாக செய்யப்பட்டது.

* 01.10.2021ல் விருதுநகரில் நடைபெறவிருக்கும் உலக மூத்தகுடி மக்கள் தினத்தில் திரளாக கலந்துகொள்வது,
* 05.10.2021ல் BSNLEU-AIBDPA-TNTCWU ஆகியவற்றின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் 05.10.2021ல் விருதுநகரில் நடத்தவிருக்கும் பேரணியில் பெருந்திரளாக கலந்துகொள்வது.
* அதே ஒருங்கிணைப்பு சார்பில் 22.10.2021ல் சென்னையில் நடைபெறவிருக்கும் பேரணியில்  மாநில அமைப்பு நிர்ணயம் செய்யும் எண்ணிக்கையில் கலந்துகொள்வது.
* மேலும் 27.09.2021ல் நடைபெற உள்ள விவசாயிகளுக்கான பார்த் பந்தில் அனைத்துத் தொழிற்சங்கங்கள் நடத்தும் மறியல் போராட்டத்தில் வாய்ப்பு உள்ளத் தோழர்கள் கலந்துகொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
*.கிளைகளை மாவட்ட மாநாட்டிற்குப் பின் அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
    இறுதியாக மாநில உதவிச் செயலாளர் தோழர். M.செல்வராஜன் நிறைவுரையாற்றினார்.
தோழர். M. பெருமாள்சாமி மாவட்ட பொருளாளர் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது. சிறப்பாக மாவட்டச் செயற்குழுவை நடத்திய மாவட்டச் சங்க நிர்வாகிகளை மாநிலச் சங்கம் மனதார பாராட்டி வாழ்த்துகிறது.

Post a Comment

0 Comments