Latest

10/recent/ticker-posts

27-09-2021ல் நாடு முழுவதும் நடைபெறும் பாரத்பந்தை ஆதரித்து போராட்டங்களில் பங்களிப்போம் !!

27-09-2021ல் நாடு முழுவதும் நடைபெறும் பாரத்பந்தை
ஆதரித்து போராட்டங்களில் பங்களிப்போம் !!


அன்புத் தோழர்களே ! வணக்கம்.

        மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும், 44 தொழிலாளர் சட்டங்களை 4 சட்டங்களாக மாற்றியதை ரத்துச் செய்யவும், நாட்டின் பொதுத்துறை சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்தும் விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு 27-09-2021 அன்று பாரத் பந்திற்கு அறைகூவல் விட்டுள்ளது.

        27-09-2021ல் நாடு முழுவதும் நடைபெறும் பாரத்பந்தை ஆதரித்து பங்களிப்போம் !!
AIBDPA மாவட்டச் சங்கங்கள் தலமட்ட நிலைமைக்கேற்ப இவ்விரு போராட்டங்களிலும் கலந்து கொண்டு விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்க வேண்டுகிறோம்.
உலகில் (பத்து மாதங்களுக்கும் மேலாக) அதிக நாட்கள் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு பிடிவாதமாகவும், எதேச்சாதிகார மாகவும் அணுகி வருகிறது. எனவே இப்போராட்டத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்திடுவோம்.

போராட்டம் இல்லாமல் யாராட்டமும் செல்லாது !!

தோழமையுடன்,
என்.குப்புசாமி ,
மாநிலச்செயலாளர் ,
AIBDPA, TAMILNADU.
26-09-2021.



Post a Comment

0 Comments