Latest

10/recent/ticker-posts

எழுச்சியுடன் நடைபெற்ற AIBDPA மாவட்ட செயற்குழு கூட்டம் !

எழுச்சியுடன் நடைபெற்ற AIBDPA ஈரோடு மாவட்ட செயற்குழு கூட்டம் !

              AIBDPA ஈரோடு மாவட்டச் செயற்குழு கூட்டம் இன்று 25.9.21 காலை மாவட்ட தலைவர் தோழர். A. சிவஞானம் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளர் தோழர். நடராஜன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

          நமது மாநில செயலாளர் தோழர். N. குப்புசாமி அவர்கள் செயற்குழுவை துவக்கி வைத்தார். மாவட்ட சங்க செயல் பாடுகள், நடைபெற்ற போராட்டங்கள் பற்றிய செயல்பாட்டு அறிக்கையை மாவட்ட துணைச் செயலாளர் தோழர். P. சின்னசாமி அவர்கள் சமர்ப்பித்தார்.

       கிளை மாநாடுகள், மாவட்ட மாநாடு பற்றியும், நடைபெற உள்ள 1.10.21 முதியோர் தினம், 5.10.21ல் நடைபெற உள்ள பேரணி பற்றியும் கிளை செயலாளர்கள் மற்றும் மாவட்டச் சங்க நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.

        12 கிளை செயலாளர்கள் 5 மாவட்டச் சங்க நிர்வாகிகள் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டனர்.  கிளை மாநாடுகள் அக்டோபர் 15 க்கு மேல் தீபாவளிக்கு முன்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட மாநாடு டிசம்பர் முதல் வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கிளை மாநாடு தேதிகள், நன்கொடை சம்பந்தமாக மாவட்ட மையம் கூடி முடிவு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

           நடைபெற உள்ள 27.09.2021 பொது வேலை நிறுத்தம் பற்றியும் அதற்கான ஆதரவு நடவடிக்கைகள் பற்றியும் மாநில அமைப்பு செயலாளர் தோழர். C. பரமசிவம் விளக்கி பேசினார்கள். மாநில துணை செயலாளர் தோழர்.  L. பரமேஸ்வரன், தோழர். P. ஆலிஸ் தமிழ் செல்வராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

முடிவுகள்.

கிளை மாநாடு உறுப்பினர் சேர்ப்பு இயக்கத்துடன் எளிமையாக நடத்துவது என்று முடிவு செய்ய பட்டுள்ளது.

1.10.21 முதியோர் தினம்
5.10.21 அன்று ஈரோடு
பொது மேலாளர் அலுவலகத்தில் இருந்து டெலிபோன் பவன் வரை பேரணி ஆகியவற்றை சிறப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

             மாவட்ட அளவிலான பிரச்சினைகள் குறித்து மாவட்ட துணை செயலாளர் தோழர். விஸ்வநாதன் பேசினார்கள். மாவட்ட செயற்குழு கூட்டத்தில் 27 நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

             இறுதியில் சென்னிமலை கிளை செயலாளர் தோழர். லோகநாதன் அவர்கள் நன்றி கூறினார்கள்.

               மிகவும் சிறப்பாக நடந்து முடிந்த  ஈரோடு மாவட்டச் செயற்குழுவை நடத்திட்ட மாவட்டச் சங்க நிர்வாகிகளையும் கலந்து கொண்ட தோழர்களையும் மாநிலச் சங்கம் பாராட்டி வாழ்த்துகிறது.

Post a Comment

0 Comments