Latest

10/recent/ticker-posts

திருச்சி மாவட்ட விரிவடைந்த செயற்குழுக் கூட்டம் !

திருச்சி மாவட்ட விரிவடைந்த செயற்குழுக் கூட்டம் !


 



           அகில இந்திய BSNL-DOT ஓய்வூதியர் சங்கம் திருச்சி மாவட்டத்தில் 21.09.2021 அன்று திருச்சியில் விரிவடைந்த செயற்குழு கூட்டமும் கொடிமேடை திறப்பு விழாவும் தோழர் P.கிருஷ்ணன், மாவட்டத் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. வரவேற்புரையை மாவட்ச் செயலர் தோழர். ஐ. ஜான்பாஷா ஆற்றினார்.

       கொடி மேடையை தோழர். N.குப்புசாமி, மாநில செயலாளர் திறந்து வைத்தார். சங்க கொடியை தோழியர் C.மணிமேகலை சின்னையன் ஏற்றினர். செயற்குழு துவங்கியது. முதலாவதாக மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இறப்பின் காரணமாக விடுபட்ட பதவிகள் நிரப்பப்பட்டது.

1. துணைத்தலைவர் தோழியர். M. மல்லிகா புதுக்கோட்டை, 2. தோழர். T. தேவராஜ் திருச்சி துணைத் தலைவர்,  3. தோழர். A.சண்முகம் துணைச் செயலாளர் திருச்சி, 4.தோழர். T. மனேகரன், கரூர் துணை செயலாளர், 5. அமைப்புச் செயலாளர்களாக தோழர்கள் D.ருக்மாங்கதன், C.ராமச்சந்திரன், S.முருகேசன், S.பாலு, L.அன்பழகன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

      புதிய நிர்வாகிகளை வாழ்த்தி தோழர். G. சுந்தர்ராஜன் BSNLEU மாவட்டச் செயலாளர் அவர்களும் தோழர். முபாரக்அலி TNTCWU மாவட்டச் செயலாளர் அவர்களும் வாழ்த்தி பேசினார்.

            புதிய உறுப்பினர்களுக்கான சந்தா 15 தோழர்களுக்கு மாநில செயலாளரிடம் வழங்கப்பட்டது. நிறைவாக நன்றியுரை மார்கோஷ் கூறினார்

       சிறப்பாக நடைபெற்ற மாவட்டச்செயற்குழுவையும் மாவட்டச் சங்க நிர்வாகிகளையும் மாநிலச்சங்கம் மனதார பாட்டி வாழ்த்துகிறது.

Post a Comment

0 Comments