சிறப்பாக நடைபெற்ற வள்ளியூர் புதிய கிளை துவக்கம் விழா !
கடந்த 17/09/2021 வெள்ளிக்கிழமை அன்று நெல்லை மாவட்டத்தில் AIBDPA சங்கத்தின் வள்ளியூர் புதிய கிளை துவக்க மாநாடு வள்ளியூரில் தொலைபேசிநிலையத்திற்கு அருகில் உள்ள அனைத்துதுறை ஓய்வூதியர் சங்க கட்டிடத்தில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். S. முத்துசாமி தலைமை சிறப்பாக நடைபெற்றது.
முதல் நிகழ்ச்சியாக மூத்த தோழர் I. ஜெபமணி அவர்கள் நமது சங்கக் கொடியை விண்ணதிரும் கோஷங்களுக்கிடையே ஏற்றி வைத்தார்.
மாவட்டத் தலைவர் தோழர். S. முத்துசாமி நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மாவட்ட உதவிச் செயலர் தோழர். A. பிச்சுமணி அஞ்சலி உரையாற்றினார். மாவட்டச் செயலர் தோழர். M. கனகமணி வரவேற்புரை நிகழ்த்தினார்.
அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன்தாஸ் கிளையை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில் கிளைகளின் செயல்பாடு எவ்வாறு அமையவேண்டும் எனவும் கிளைகளின் அவசியத்தையும் மேலும் மத்திய மாநிலச் சங்கச் செயல்பாடுகளையும் போராட்ட அவசியங்களையும் ஓய்வூதிய மாற்றம், மருத்துப்படி அவசியத்தையும் விளக்கி பேசினார்.
தூத்துக்குடி மாவட்டச் செயலர் தோழர். P. ராமர், சென்னை மாவட்டத் தலைவர் C. சுவாமிகுருநாதன், நெல்லை மாவட்ட பொருளாளர் தோழர். V. சீதாலெட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
புதிய கிளை தலைவராக தோழர். ஜெபமணி, கிளைச் செயலராக தோழர். A. பிச்சுமணி, கிளைப் பொருளாளராக தோழர். ஞானப் பாக்கியராஜ் உள்ளிட்ட 14 தோழர்கள் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். கிளை துவக்க விழாவின் நிறைவாக தோழர். அர்சுணன் மதுரகவி நன்றி கூறினார்.
சிறப்பாக துவங்கப்பட்ட வள்ளியூர் கிளையையும் நடத்திட்ட மாவட்டச் சங்க நிர்வாகிகளையும் புதியகிளை நிர்வாகிகளையும் மாநிலச்சங்கம் மனதார பாட்டி வாழ்த்துகிறது.
0 Comments