Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற AIBDPA சேலம் மாவட்டச்சங்க செயற்குழு கூட்டம் !!

சிறப்பாக நடைபெற்ற AIBDPA சேலம் மாவட்டச்சங்க செயற்குழு கூட்டம் !!




              AIBDPA சேலம் மாவட்ட ஓய்வூதியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் 26-09-2021 காலை 11 மணிக்கு திருச்செங்கோடு தொலைபேசி நிலைய வளாகத்தில் வைத்து மாவட்டத் தலைவர் தோழர். ப. இராமசாமி தலைமையில் சங்க கொடியேற்றம், கோஷ முழக்கங்களோடு சிறப்பாக நடைபெற்றது.

                      மாவட்டச் செயலாளர் தோழர். M. மதியழகன் வரவேற்புரை ஆற்றினார். AIBDPA மாநிலச் செயலாளர் தோழர். N. குப்புசாமி அவர்கள் துவக்கி வைத்து உரையாற்றினார். தோழர். E. கோபால், மாவட்ட செயலாளர், BSNLEU, தோழர். S. தமிழ்மணி, உதவி தலைவர் BSNLEU, தோழர். பாஸ்கர், மாநில உதவி செயலாளர், TNTCWU, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

       அமைப்பு நிலை விவாதத்தை தோழர். T. பழனி துவக்கி வைத்து உரையாற்றினார். AIBDPA சேலம் மாவட்டச் செயலாளர் தோழர். M. மதியழகன்  செயல் அறிக்கை சமர்ப்பித்தார். தோழர். S. மைக்கேல் ஆன்டனி மாவட்ட பொருளாளர் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தார். கிளை செயலாளர்கள் தோழர். K. ராமசாமி, திருச்செங்கோடு, தோழர். சண்முகம் எடைப்பாடி, தோழர் கௌஸில்யன் ஓமலூர், தோழர் அங்குராஜ் நாமக்கல், தோழர் P.M. ராஜேந்திரன் ராசிபுரம் மற்றும் தோழர்கள் குமாரசாமி, சண்முகம் வேலூர், சுதாகரன் ஆகியோர் அமைப்பு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விவாதங்களுக்கு பதில் அளித்து மாநிலச் செயலர் மற்றும் மாவட்டச் செயலர் நிறைவுரை ஆற்றினர். செயல்பட்டு அறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

          59 தோழர்கள் கலந்து கொண்ட செயற்குழுவின் நிறைவாக தோழர். ராஜலிங்கம் அவர்களின் நன்றியுறைவுடன் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

       சேலம் மாவட்டச் செயற்குழு சிறப்பாக நடைபெற உழைத்திட்ட மாவட்டச் சங்க நிர்வாகிகள் மற்றும் தோழர்களை மாநிலச் சங்கம் மனதாரப் பாராட்டி வாழ்த்துகிறது.

Post a Comment

0 Comments