கோவை மாவட்ட SBC கிளை பொதுக்குழு கூட்டம்
தோழர்களே !!
27.10.26 கோவை மாவட்ட SBC கிளைக் கூட்டம் தோழர். பொன்னுசாமி கிளை தலைவர் அவர்கள் தலைமையில் 40க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்ட கிளை கூட்டமாக நடைபெற்றது. கிளைச் செயலாளர் அன்பழகன் அனைவரையும் வரவேற்று தனது கருத்துக்களை பதிவு செய்தார். அஞ்சலி நிகழ்ச்சி தோழர் ராஜசேகரன் கிளை பொருளாளர் நடத்தி முடித்தார்.
தலைமை உரை கிளை தலைவர் பொன்னுசாமி அவர்கள் பல்வேறு அம்சங்களை சுட்டி காட்டி விளக்கவுரை பதிவு செய்தார். கிளை பொருளாளர் தோழர் ராஜசேகர் கிளையின் நிதி நிலை அறிக்கை சமர்ப்பித்தார். தொடர்ந்து மாநில உதவி தலைவர் தோழர். நிசார் அகமது, மாவட்ட உதவி தலைவர் தோழர். கே. சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் தோழர். N.P. இராஜேந்திரன் திருப்பூர் கிளைச் செயலாளர் தோழர் விஸ்வநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்டச் சங்கத்தின் வேண்டுகோளுக்கு ஏற்ப கிளை பொருளாளர் தோழர். S. மோகன்தாஸ் அவர்கள் எழுதிய AIBDPA சங்க வரலாறு 25 புத்தகங்களுக்கு முன் தொகையாக வழங்குவதற்கு கிளைக் கூட்டத்தின் அனுமதி யுடன் உடனடியாக கொடுப்பதாக உறுதிமொழி அளித்தார்.
இறுதியாக மாவட்ட செயலாளர் தோழர். A. குடியரசு தற்போதய சங்க நிலைப்பாடும் மாவட்டச் சங்கத்தின் செயல்பாடும் பற்றி எடுத்துரைத்தார். தோழர் ராஜசேகர் கிளை பொருளாளர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
வாழ்த்துக்களுடன்
A.குடியரசு DS/AGS




0 Comments