AIBDPA TN
நேபாள நிவாரண நிதி – மாவட்டங்களின் மகத்தான பங்களிப்பு !
தோழர்களே !
NCCPA மற்றும் AIBDPA மத்தியச் சங்கத்தின் அறைகூவலுக்கு இணங்க, நேபாள நிவாரண நிதிக்காக நமது மாநிலச் சங்கம் நிதி திரட்டும் பணியை முன்னெடுத்தது.
இதன் அடிப்படையில், பல்வேறு மாவட்டச் சங்கங்கள் அளித்துள்ள நன்கொடைகளின் மொத்தத் தொகை ரூ.1,20,000/- (ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்) ஆகும்.
நேபாள நிவாரண நிதி வழங்கிய மாவட்டங்கள் – நன்கொடை விவரம்:
கோவை – ரூ.20,000
ஈரோடு – ரூ.10,000
வேலூர் – ரூ.10,000
சேலம் – ரூ.10,000
மதுரை – ரூ.5,000
விருதுநகர் – ரூ.5,000
திருச்சி – ரூ.12,000
நாகர்கோவில் – ரூ.8,000
தூத்துக்குடி – ரூ.7,700
திருநெல்வேலி – ரூ.6,800
கடலூர் – ரூ.5,000
தர்மபுரி – ரூ.2,000
சென்னை – ரூ.5,000
கும்பகோணம் – ரூ.1,000
பாண்டிச்சேரி – ரூ.5,000
குன்னூர் – ரூ.5,000
தஞ்சாவூர் – ரூ.500
காரைக்குடி – ரூ.2,000
மொத்தம்: ரூ.1,20,000 (ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய்).
இந்த நிதி மத்தியச் சங்கத்திற்கு மாநில சங்கத்தின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனிதநேயப் பணிக்கு தாராளமாக நிதியளித்த அனைத்து மாவட்ட, கிளை சங்கங்களுக்கும், நன்கொடை வழங்கிய தோழர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு மாநிலச் சங்கத்தின் சார்பில் இதயபூர்வமான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதில் நமது தோழர்கள் காட்டியுள்ள ஒற்றுமையும், தோழமை உணர்வும் பாராட்டுக்குரியது.
ஒற்றுமையே நமது பலம் !
மனிதநேயமே நமது இயக்கத்தின் அடையாளம் !
R. ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
A.இளங்கோவன்
மாநில பொருளாளர்
AIBDPA மாநிலச் சங்கம்
1.11.2026

0 Comments