சேலம் மாவட்ட பரமத்திவேலூர் கிளையின் இரண்டாவது கிளை மாநாடு !!
P.வேலூர் கிளையின் இரண்டாவது கிளை மாநாடு 6.10.2026 இன்று (பரமத்தி) வேலூர் தொலைபேசி நிலையத்தில் நடைபெற்றது. CoC தோழர்கள் R. ரமேஷ் கிளைச் செயலாளர் BSNLEU, C. பாஸ்கர் மாநில பொருளாளர் TNTCWU, M. சண்முகம் மாநில அமைப்புச் செயலாளர் BSNLEU,பா K.ஞானசேகரன் AIBDPA கிளைச் செயலாளர் ஆகியோர் கிளை மாநாட்டிற்கான ஏற்பாடு செய்திருந்தனர்.
AIBDPA கொடியினை தோழியர். M.கண்ணம்மா அவர்கள் ஏற்றிவைத்தார். தோழர் R.கொழந்தசாமி VP அவர்கள் மாநாட்டிற்கு தலைமை ஏற்றார். தோழர் M.சண்முகம் அவர்களின் அஞ்சலி உரை, தோழர் K.ஞானசேகரன் அவர்களின் வரவேற்புரைக்குப் பின் தோழர் P. தங்கராஜு மாவட்ட பொருளாளர் அவர்கள் துவக்கவுரை ஆற்றினார்.
மாவட்டச் செயலாளர் தோழர். S. தமிழ்மணி அவர்கள் சிறப்புரைக்குப் பின் ஆண்டறிக்கை வரவுசெலவு சமர்ப்பிக்கப் பட்டது.புதிய நிர்வாகிகள் தேர்வில் தோழர்கள் R.கொளந்தசாமி, M.சண்முகம் , K.ஞானசேகரன் ஆகியோர் முறையே புதிய கிளைத் தலைவர், செயலாளர், பொருளாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர்கள் C. பாஸ்கர் CT TNTCWU, V. குமார் DT TNTCWU, S. ராமசாமி BS நாமக்கல், P.A.ஆறுமுகம் ADS AIBDPA ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில அமைப்புச் செயலாளர் தோழர். S.அழகிரிசாமி அவர்கள் நிறைவுரை ஆற்றினார். இறுதியாக தோழர் R.ரமேஷ் BSNLEU கிளைச் செயலாளர் அவர்கள் புதிய நிர்வாகிகளை வாழ்த்தியும், மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறியும் மாநாட்டினை முடித்து வைத்தார்.
S. தமிழ்மணி
மாவட்டச் செயலாளர் AIBDPA




0 Comments