AIBDPA TN - சங்க அமைப்பு தினக் கொண்டாட்டங்கள் - 21.10.26 - மாபெரும் வெற்றி !!
செவ்வணக்கம் தோழர்களே!
AIBDPA சங்கத்தின் 18-ஆம் ஆண்டு அமைப்பு தினக் கொண்டாட்டங்கள் 21.10.26 இன்று தமிழ்நாடு முழுவதும் மிகச் சிறப்பாகவும், எழுச்சியுடனும் நடைபெற்றுள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் கிளை மட்டங்களில் சங்கக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, சிறப்புக் கூட்டங்கள் நடத்தி, தோழர்கள் உற்சாகத்துடன் அமைப்பு தினத்தைக் கொண்டாடினர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிலவிய மோசமான வானிலை, கனமழை, தண்ணீர் தேக்கம் மற்றும் போக்குவரத்துப் பாதிப்புகள் போன்ற இடையூறுகளையும் பொருட்படுத்தாமல், தோழர்கள் பெருந்திரளாகவும் மிகுந்த உற்சாகத்துடனும் பங்கேற்றது மிகவும் பாராட்டுக்குரியது.
இத்தகைய சிறப்பான நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வெற்றிபெறச் செய்த கிளைச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மத்திய சங்க நிர்வாகிகள் மற்றும் அனைத்து மட்ட நிர்வாகிகளுக்கும் AIBDPA தமிழ்நாடு மாநிலச் சங்கத்தின் சார்பில் இதயபூர்வமான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வலிமையான AIBDPA
வளமான ஓய்வூதியர்!
R. ராஜசேகர்
மாநிலச் செயலாளர், AIBDPA தமிழ்நாடு
21.10.26
0 Comments