Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - மாநிலச் சங்க மையக் கூட்டம் - 13-10-2026.

  AIBDPA TN - மாநிலச் சங்க மையக் கூட்டம் - 13-10-2026.

தோழர்களே,

              நமது AIBDPA தமிழ் மாநிலச் சங்கத்தின் மாநில மையக் கூட்டம் மாநிலத் தலைவர் தோழர் C.ஞானசேகரன் தலைமையில், Whatsapp ஆன்லைன் மூலமாக 13-10-2026 அன்று மாலை 05-00 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில்  மாநிலச் செயலாளர் தோழர் R.ராஜசேகர், அகில இந்திய துணைத் தலைவர் தோழர் S மோகன் தாஸ்,  அகில இந்திய துணை பொது செயலாளர் தோழர் A.குடியரசு, அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் பெர்லின் கனகராஜ்,  அகில இந்திய அமைப்பு செயலாளர் தோழர் N. குப்புசாமி, மாநிலப் பொருளாளர் தோழர் A இளங்கோவன் மாநில அமைப்பு செயலாளர் தோழர் A ஆரோக்கிய நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்கண்ட கூட்டத்தில் நடந்த விவாதங்களுக்குப் பிறகு, கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. 

👉 தோழர் S மோகன்தாஸ் எழுதியுள்ள "AIBDPA வரலாறு" புத்தக விநியோகம் தொடர்பாக நடந்த விவாதத்தில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும்  கலந்து  பேசி  நிர்ணயிக்கப்படுகின்ற  இலக்கை அந்தந்த மாவட்ட செயலாளர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும். அதோடு 300/- ரூபாய் விலையுள்ள புத்தகம் நமது உறுப்பினர்களுக்கு 150/- ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். எனவே மாவட்டங்கள் முன் பணம் கொடுப்பது  அவசியம்.

இதற்கான பொருப்பாளராக தோழர். G.சுந்தர்ராஜன் COS அவர்கள் செயல்படுவார். 

👉 29-07-2026 அன்று கோவையில் நடந்த மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட  முடிவுகளான உறுப்பினர் சந்திப்பு இயக்கம், ஆண்டு நன்கொடை சந்தா வசூலித்தல், ஓய்வூதியர் முழக்கம் பத்திரிகையின் சந்தாவை அதிகரித்தல், உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரித்தல் ஆகிய முடிவுகளை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

👉 ஓய்வூதியர் முழக்கம் பத்திரிகை விநியோகத்தை விரிவுபடுத்தி,  அது தொடர்பான விமர்சனங்களை முன்வைக்க வேண்டும் என்பதை மாவட்ட சங்கங்கள் வலியுறுத்த வேண்டும்.

👉 21-10-2026 AIBDPA சங்க அமைப்பு தினத்தை ஒவ்வொரு கிளைகளிலும் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, சிறப்பு கூட்டங்கள் நடத்தி அனைவரும் உணர்வு பூர்வமாக அனுசரிக்க வேண்டும்.

👉 அக்டோபர் 1 உலக மூத்தோர் தினம், மற்றும் அக்டோபர் 21 சங்க அமைப்பு தினம் இவற்றை நினைவுகூரும் வகையில் அக்டோபர் 23ம் தேதி நமது மேனாள் பொது செயலரும், ஆலோசகருமான தோழர் K G ஜெயராஜ் தலைமையில் இணையவழி மூலம் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்படும். அதில் பெரும்பாலான  தோழர்களை கலந்துகொள்ள செய்ய வேண்டும்.

👉 பல கிளைகளிலும் மாநாடுகள் நடந்துவரும் சூழ்நிலையில், இனி வரும் மாநாடுகளை குடும்ப விழாக்களாக நடத்தலாம் என்ற ஆலோசனை முன் வைக்கப்படுகிறது. 

அப்படி நடத்தினால் குடும்பங்களை நாம் அணுக எளிதாக இருக்கும்.

👉 மதுரையை சேர்ந்த மாநில அமைப்புச் செயலர் தோழர் G.சுந்தரராஜன் சென்னையில் நிரந்தரமாக குடியேறிவிட்டதால் அவரையும் மாநில மையத்தில் இணைத்துக் கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டது. 

தோழமையுடன்,
R ராஜசேகர் 
மாநிலச் செயலாளர் 
AIBDPA TN
15-10-2026.

Post a Comment

0 Comments