AIBDPA ஈரோடு மாவட்ட சங்கத்தின் வெள்ளகோவில் கிளையின் 2 வது கிளை மாநாடு
தோழர்களே!
AIBDPA ஈரோடு மாவட்ட வெள்ளகோவில் கிளையின் இரண்டாவது மாநாடு 30.10.2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் கிளைத்தலைவர் தோழர் A.சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் துவங்கியது. கிளைச்செயலர் தோழர். K. ரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மாநாட்டை துவக்கி வைத்த மாவட்டச் செயலர் தோழர். M. நடராஜன் அவர்கள் தனது உரையில் அ.இ. சங்கம், மாநிலசங்கம், மாவட்டச்சங்கம் செய்த சாதனைகளையும், நடைபெற்ற இயக்கங் களையும் பட்டியலிட்டு பேசினார். மாநாட்டில் அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். N. குப்பசாமி அவர்கள் தனது சிறப்புரையில், மத்திய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் உலகமயமாக்கல் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பல்வேறு நாடுகளின் போர்கள், அதனால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை விளக்கியும், நமது சங்கத்தின் சாதனை களையும் பட்டியலிட்டார்.
மாநில உதவிச் செயலர் தோழர். L. பரமேஸ்வரன் அவர்கள் தனது சிறப்புரையில், BSNLEU வின் உதவியோடு நமது சங்கம் AIBDPA துவங்கப்பட்டு, கடந்த18 ஆண்டுகளில் நமதுசங்கம் செய்த சாதனைகள், நாம் நடத்திய போராட்டங்கள், NCCPA, FCPA அமைப்புகள் துவக்கம், அதன் போராட்டங்களை விளக்கினார்.
மாநாட்டை வாழ்த்தி தோழர்கள் G.வெங்கடேசன் DT, V.மணியன் ADS, N. சுப்பிரமணி BS கொடுமுடி, P. செல்லமுத்து BS காங்கயம் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மாநாட்டின் முத்தாய்ப்பாக மூத்த தோழர். D.சாமிக்கண்ணு P I அவர்கள் தன்னை AIBDPA சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும், ஓய்வூதியர் முழக்கத்தின் ஆயுள் சந்தாதாரராகவும் தன்னை இணைத்துக் கொண்டார்.
பிறகு நடைபெற்ற பொருளாய்வுக் குழுவில் கிளைச்செயலர் சமர்பித்த ஆண்டறிக்கை ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. நிதிநிலை அறிக்கையை அடுத்த கிளைப் பொதுக் குழுவில் சமர்பிப்பதாக கூறியதை அடுத்து, ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டது.
கிளையின் புதிய நிர்வாகிகள் தேர்வை மாவட்டச்செயலர் தோழர் M. நடராஜன் அவர்கள் நடத்திக் கொடுத்தார். கீழ்கண்டோர் புதிய நிர்வாகிகளாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
தலைவர் : தோழர். A.சுவாமிநாதன், SS VEL.
உதவித்தலைவர் : தோழர் V.ராமசாமி, TT VEL,
செயலாளர் : தோழர். K.ரத்தினம், TT VEL,
உதவிச்செயலர் : தோழர். P. பால சுப்பிரமணியன், TT புதுப்பை.
பொருளாளர் : தோழர். S.நாட் ராயன். TT VEL
உதவிப் பொருளாளர் : தோழர். K. ராமசுந்தரம், TT முத்தூர்.
அமைப்புச்செயலர்கள் :
தோழர். K.சண்முகம், TT முத்தூர்.
தோழர். R.கனேசன், TT VEL.
தோழர். C.செல்லமுத்து, TT புதுப்பை.
தோழியர். C.ஜானகி, ATT Family pensinar VEL
தோழியர். T. சுமதி Thangaraj, Familypensionar VEL.
தணிக்கையாளராக தோழர். K. சுப்பிரமணியன், TT VEL நியமனம் செய்யப்பட்டார்.
கிளையின் சார்பாக நேபாள் நிதி, மாநில, மாவட்டச் சங்களுக்கு நன்கொடை, புதிய உறுப்பினர் கட்டணம், ஓய்வூதியர் முழக்கம் ஐந்தாண்டு சந்தா உட்பட ரூபாய். 5700/-ஐ வழங்கினார்கள். சபாஷ்.... மாவட்ட செயற்குழுவின் முடிவினை முழுமையாக அமுல்படுத்தி எழுச்சியுடன் வெற்றியடைந்த கிளை மாநாடு !!
நிறைவாக பொருளாளர் தோழர். S. நாட்ராயன் அவர்கள் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.
தோழமை வாழ்த்துக்களுடன்
எம். நடராஜன் மாவட்டச் செயலாளர்.



0 Comments