FCPA TN பத்திரிக்கையாளர் சந்திப்பு - 17.09.2026, சென்னை
தோழர்களே,
17.09.2026 அன்று சென்னையில் தமிழ்நாடு FCPA கூட்டமைப்பின் சார்பில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.
காலை 11.00 மணி அளவில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் R. ராஜசேகர், செயல் தலைவர்கள் தோழர்கள் P. மோகன், M. துரை பாண்டியன், துணைத் தலைவர் தோழர் C.K. நரசிம்மன், உதவி அமைப்பாளர்கள் தோழர்கள் K. கோவிந்தராஜ் , சேகர் (AIPRPA), நூர் முகமது (AIFPA) உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் 14 பத்திரிகையாளர்கள் மற்றும் பல்வேறு காட்சி ஊடகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, ஓய்வூதியர்களின் பிரச்சினைகள் மற்றும் நடைபெறவுள்ள போராட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர்.
பத்திரிகையாளர் சந்திப்பில் தோழர்கள் R. ராஜசேகர், P. மோகன், M. துரை பாண்டியன் ஆகியோர், மத்திய அரசு ஓய்வூதியர்களின் 11 அம்சக் கோரிக்கைகள், அவற்றின் பின்னணி மற்றும் அவற்றை வலியுறுத்தி செப்டம்பர் 17, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் தொடர் தர்ணா போராட்டங்கள் குறித்து விரிவாக விளக்கினர்.
ஓய்வூதியர்களின் வாழ்வாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்தின் நோக்கங்களையும் பத்திரிகையாளர்களிடம் எடுத்துரைத்தனர்.
இதே போல, கோயம்புத்தூரிலும், BSNLEU அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் FCPA மாவட்டத் தலைவர் தோழர் S. அரங்கநாதன், மாவட்டச் செயலாளர் தோழர் கருணாநிதி, AIBDPA மத்திய உதவிப் பொதுச்செயலாளர் தோழர் A. குடியரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பத்திரிகையாளர்களிடம் 11 அம்சக் கோரிக்கைகள் மற்றும் நடைபெறவுள்ள தர்ணா போராட்டம் குறித்து விரிவாக விளக்கினர்.
தமிழ்நாட்டில் நடைபெறும் இப்போராட்டத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஓய்வூதியர் அமைப்புகளும் முழுமையான ஒத்துழைப்புடன் திரளாகப் பங்கேற்று, போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுகிறோம்.
ஓய்வூதியர்களின் உரிமைகளுக்கான இந்தப் போராட்டத்தை வலுப்படுத்துவோம் !
ஒற்றுமையுடன் முன்னேறுவோம் !!
வெற்றி நமதே !!!
R. ராஜசேகர்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
FCPA தமிழ்நாடு
17.09.2026




0 Comments