AIBDPA சேலம் மாவட்ட சங்ககிரி கிளையின் இரண்டாவது கிளை மாநாடு
சேலம் மாவட்ட சங்ககிரி கிளையின் இரண்டாவது கிளை மாநாடு கொடியேற்றத்துடன் 27.9.2026 இன்று துவங்கியது. AIBDPA வின் செங்கொடியினை சங்ககிரி மூத்த தோழர். சீனிவாசன் Retd STS அவர்கள் ஏற்றி வைத்தார். கிளை மாநாட்டிற்கு கிளை தலைவர் தோழர். S.சுப்பிரமணியன் Retd STS அவர்கள் தலைமை ஏற்றார். தோழர். P.ஜெயராமன் ABS அவர்கள் அஞ்சலி உரை வாசித்தார். கிளை மாநாட்டினை மாவட்ட பொருளாளர் தோழர் P.தங்கராஜ் அவர்கள் துவக்கி வைத்தார்.
AIBDPA அகில இந்திய அமைப்புச் செயலாளர் தோழர். N.குப்புசாமி அவர்கள் மாநாட்டு பேருரையாற்றினார். BSNLEU மாநில உதவி செயலாளரும் சேலம் மாவட்டச் செயலருமான தோழர். எஸ் ஹரிஹரன், AIBDPA மாவட்ட செயலர். S. தமிழ்மணி ஆகியோர் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்கள்.
ஆண்டறிக்கை வரவு செலவு வைக்கப்பட்டு ஏகமனதாக ஏற்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் தேர்வில் தோழர் S.சுப்பிரமணியன் Retd STS, தோழர் V.மயில்சாமி Retd TT, தோழர் C.கணேசன் Retd TT ஆகியோர் முறையே கிளை தலைவர், செயலர், பொருளாளராக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளை AIBDPA மாவட்ட துணைத் தலைவர் தோழர் K.ராமசாமி, மாவட்ட அமைப்பு செயலாளர் தோழர் R.இளங்கோவன், ADS தோழர் P.A.ஆறுமுகம், எடப்பாடி கிளை செயலாளர் தோழர் P.சண்முகம், திருச்செங்கோடு V.பரந்தாமன், TNTCWU ஒப்பந்த ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர். M.செல்வம், மாவட்ட பொருளாளர் தோழர். V.குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் என முப்பதுக்கும் மேற்பட்ட தோழர், தோழியர்கள் கலந்து கொண்ட மாநாடு. தோழர் சுப்பிரமணியன், புதிய கிளைச் செயலாளர் தோழர் V.மயில்சாமி ஆகியோரின் நன்றி உரையுடன் நிறைவு பெற்றது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட சங்ககிரி கிளை நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
S.தமிழ்மணி
மாவட்டச் செயலாளர்
AIBDPA சேலம்.





0 Comments