Latest

10/recent/ticker-posts

வெற்றிகரமாக நடைபெற்ற வேலூர் மாவட்ட விரிவடைந்த செயற்குழு !!

 வெற்றிகரமாக நடைபெற்ற வேலூர் மாவட்ட விரிவடைந்த செயற்குழு







 தோழர்களே !

      வேலூர் மாவட்ட AIBDPA சங்கத்தின் விரிவடைந்த மாவட்ட செயற்குழு இன்று (26.9.2026) காலை 10.30 மணி அளவில் எல்ஐசி தொழிற்சங்க அரங்கமான சரோஜ் இல்லத்தில் இனிதே துவங்கியது. செயற்குழு கூட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர் தோழர். C.தங்கவேலு தலைமையேற்று உரை நிகழ்த்தினார். நமது மூத்த தோழர் P. ஸ்ரீதரன் அவர்கள் அஞ்சலி உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் மாவட்டச் செயலாளர் தோழர். ப. முருகன் வரவேற்றார்.

                 செயற்குழுவினை வாழ்த்தி வேலூர் மாவட்ட சங்கத்தின் கௌரவ ஆலோசகர் தோழர். V. மணி அவர்களும், கௌரவ தலைவர் தோழர். V. ஏழுமலை அவர்களும் உரையாற்றினர். தோழமைச் சங்கங்களில் இருந்து வந்திருந்த தோழர். A.கதீர் அகமது, மாவட்டச் செயலாளர்  AIPRPA, தோழர். குமரேசன் மாவட்டத் தலைவர் TNGPA, தோழர். பாக்கியராஜ் மாவட்டச் செயலாளர், TNGPA ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.

              நமது மாநில செயலர் தோழர்.  R.ராஜசேகர் அவர்கள் தமது சிறப்புரையில்.. ஓய்வூதியர்கள் இன்றைக்கு சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும், ஓய்வூதிய மாற்றத்திற்காக நாம் நடத்திய போராட்டங்கள் குறித்தும், AIBDPA தோன்றிய வரலாறும் இன்றைய அதன் நிலைமை குறித்தும் மற்றும் நமது தோழர்களை பாதித்துள்ள சொசைட்டி பிரச்சனை குறித்தும், மெடிக்கல் பில்கள் குறித்தும் பேசியதோடு நமது மாவட்டத்தின் செயல்பாடுகளை பாராட்டியும்.. தீர்க்கப்படாத பிரச்சனைகள் குறித்தும்.. மிக விரிவாக உரையாற்றினார்.

             பின்னர் உணவு இடைவேளை விடப்பட்டு மீண்டும் மதியம் 2.00 மணிக்கு கூடிய கூட்டத்தில் தோழர். P. சரவணன், மாநில உதவி பொருளர், தோழர். C. ஞானசேகரன் மாநில தலைவர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பின்னர் நமது செயற்குழுவை வாழ்த்தி BSNLEUவின் மாநில செயலாளர் தோழர். B. மாரிமுத்து உரையாற்றினார். ஊதிய மாற்றத்தின் இன்றைய நிலை குறித்தும், அதற்கான எதிர்வரும் போராட்டங்கள் குறித்தும், அந்தப் போராட்டங்களில் AIBDPA வின் பங்கு குறித்தும் விரிவாக பேசினார்.

             செயல்பாட்டு அறிக்கையினை மாவட்ட செயலாளர் தோழர். ப.முருகன் சமர்ப்பித்தார். 1.7.2024 முதல் 31.06.2026 வரைக்குமான வரவு செலவு கணக்குகளை மாவட்டப் பொருளாளர் தோழர். P.லோகநாதன் அவர்கள் சமர்ப்பித்தார். பின்னர் ஆண்டு அறிக்கையின் மீது விவாதம் என்ற அடிப்படையில் ஆம்பூர் கிளை சார்பாக தோழர். D.ராஜேந்திரன், திருப்பத்தூர் கிளைச் செயலாளர் தோழர். P.குப்புலிங்கம், திருவண்ணாமலை கிளை செயலர் தோழர். கிருஷ்ணன், ஆரணி கிளையின் சார்பாக அதன் பொருளாளர் தோழர். J.வளையாபதி, செய்யாறு கிளையின் சார்பாக தோழர். சிவலிங்கம், ராணிப்பேட்டை கிளைச் செயலாளர் தோழர். வாசுதேவன்,  ஆகியோர் தங்களது கிளையின் அமைப்பு நிலை குறித்தும் பிரச்சனைகள் குறித்தும் உரையாற்றினர்.

         இறுதியாக தொகுப்புரையை மாவட்ட செயலாளர் தோழர். ப.முருகன் வழங்கினார். சுமார் 4 மணி அளவில் மாவட்டப் பொருளாளர் தோழர் பி. லோகநாதன் நன்றி கூறி கூட்டத்தை முடித்து வைத்தார். கூட்டத்தில் 6 தோழியர்கள் உட்பட சுமார் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

          செயற்குழுவில் கலந்து கொண்டு சிறப்பித்த மாவட்ட சங்க நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மற்றும் வேலூர் தோழர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கத்தின் வீர வாழ்த்துக்கள். இந்த செயற்குழு சிறப்பாக நடைபெற எல்லா பணிகளையும் மேற்கொண்ட வேலூர் கிளை தோழர்கள் அனைவருக்கும் மாவட்ட சங்கம் தனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறது.

 தோழமையுள்ள 
ப.முருகன் 
மாவட்ட செயலாளர் 
வேலூர்.

Post a Comment

0 Comments