Latest

10/recent/ticker-posts

AIBDPA TN இணையவழி மாநில மையக் கூட்டம் - 23.09.2026

  AIBDPA TN இணையவழி மாநில மையக் கூட்டம் -23.09.2026



தோழர்களே,

                 AIBDPA தமிழ்நாடு மாநிலச் சங்கத்தின் மாநில மையக் கூட்டம் 23.09.2026 அன்று மாலை இணையவழியில் நடைபெற்றது. விரிவான விவாதங்களுக்குப் பின்னர், பின்வரும் முக்கிய முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன:

1. BSNL ஊழியர்களின் 3வது ஊதிய மாற்றத்தை அமல்படுத்தக் கோரும் போராட்டம்

        BSNL ஊழியர்களின் 3வது ஊதிய மாற்ற ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தக் கோரி, AUAB பல கட்டங்களாக நாடு தழுவிய போராட்டங்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. வரும் 25.09.2026 அன்று ஆர்ப்பாட்டத்துடன் தொடங்கி, 20.11.2026 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற உள்ளன.

            இப்போராட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் AIBDPA தமிழ்நாடு மாநிலச் சங்கத் தோழர்கள் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

             அனைத்து மாவட்டச் சங்கங்களும் தங்களது மாவட்ட AUAB அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, போராட்டத்தின் அனைத்து கட்டங்களிலும் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கி, போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டும்.

2. 25.11.26 புதுடெல்லி பேரணி

       FCPA முன்னெடுக்கும் அடுத்த கட்டப் போராட்டமான புதுடெல்லி பேரணியில், தமிழ்நாட்டிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கின்படி அதிக எண்ணிக்கையில் தோழர்கள் பங்கேற்பதை உறுதி செய்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

3. நேபாளப் பேரிடர் நிவாரண நிதி

            நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, இது வரை நிதி அனுப்பாத  மாவட்டச் சங்கங்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நன்கொடைத் தொகையை உடனடியாக முழுமையாக மாநிலச் சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 

4. ஓய்வூதியர் சந்திப்பு இயக்கம்

         மாநிலச் சங்கம் ஏற்கனவே வழங்கியுள்ள வழிகாட்டுதலின்படி, ஓய்வூதியர் சந்திப்பு இயக்கத்தை முழுமையாக நிறைவேற்றி, அதிகளவிலான ஓய்வூதியர்களை இயக்கத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

            மாநில மையக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட முடிவுகளை அனைத்து மாவட்டச் சங்கங்களும் முழுமையாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்தி, மாநில அளவிலான இயக்கத்தை மேலும் வலுப்படுத்திட வேண்டும் என மாநிலச் சங்கம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்,
R. ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
AIBDPA தமிழ்நாடு
23.09.2026

Post a Comment

0 Comments