கோவை மாவட்ட கணபதி கிளைக் கூட்டம்
தோழர்களே !!
20.8.2026 அன்று தோழர். K.. சந்திரசேகரன் கிளைத் தலைவர் அவர்கள் தலைமையில் 24 தோழர்கள் கலந்து கொண்ட கோவை மாவட்ட கணபதி கிளைக் கூட்டம் சிறப்பாக நடந்தது. அஞ்சலி நிகழ்ச்சி தோழர். சசி நடத்தினார். வரவேற்புரை கிளைச் செயலாளர் தோழர். சந்திரன் தனது கருத்துக்களை பதிவு செய்து அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
தோழர். பங்கஜவல்லி மகளிர் அமைப்பு மாநில உபகுழு மற்றும் N.P. ராஜேந்திரன் மாவட்ட பொருளாளர் வாழ்த்துரை வழங்கினர். மாநில உதவித் தலைவர் தோழர். V. வெங்கட்ராமன் பல்வேறு நிகழ்வுகளை சுட்டி காட்டி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட செயலாளர் தோழர். A. குடியரசு DS/AGS நமது மாவட்ட, மாநில, அகில இந்திய சங்க செயல்பாடுகள், நடைபெற்றுக் கொண்டிருக்கும் இயக்கங்கள், உறுப்பினர் சந்தேகங்களுக்கு பதில் அளித்து கருத்து கூறி துவக்க உரை வழங்கினார். வந்திருந்த தோழர்கள் மாநில சங்கத்தின் வேண்டுகோளின்படி 20 தோழர்கள் தலா ₹ 200/- வீதம் நன்கொடை வழங்கினர்.
இறுதியாக கிளை பொருளாளர் தோழர். முத்து நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்




0 Comments