கோவை மாவட்ட உடுமலை கிளை கூட்டம் !!
தோழர்களே !!!
11.8.2026ல் கோவை மாவட்ட உடுமலை கிளை கூட்டம் கிளைத் தலைவர் தோழர். ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் 29 பேர் கலந்து கொண்ட கிளைக் கூட்டமாக மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது. தோழர். வெங்கடேசன் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தினார். கிளைச் செயலாளர் தோழர். சின்னச்சாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர். C.மணி, தோழர். பாபு மாவட்டத் தலைவர் BSNLEU, தோழர்கள் சக்திவேல், பழனிசாமி, சிக்கந்தர் பாஷா ஆகியோர் பொதுக்குழு கூட்டத்தில் வாழ்த்துரை வழங்கினார்கள். தோழர். A.குடியரசு மாவட்டச் செயலாளர் மாவட்ட சங்கத்தின் செயல்பாடுகள், மாநில செயற்குழுவின் முடிவுகள், அகில இந்திய சங்கத்தின் செயல்பாடுகள், டெல்லி தர்ணா, சொசைட்டி பற்றி விளக்கமாக கூறி துவக்க உரை வழங்கினார்.
கிளைச்செயலாளர் தோழர். சின்னசாமி மாநில சங்கத்தின் மாநில செயற்குழு முடிவுகளின் ஒன்றான ரூபாய் 200 உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், 15 தோழர்கள் உடனடியாக ₹200/- வீதம் நன்கொடை வழங்கினார்கள்.
இறுதியாக கிளை பொருளாளர் தோழர் குணசேகரன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்



0 Comments