கோவை மாவட்ட கணபதி கிளையின் பொதுக்குழு கூட்டம்
தோழர்களே !!
25.6.26 அன்று தோழர் K.. சந்திரசேகரன் கிளைத் தலைவர் அவர்கள் தலைமையில் 26 தோழர்கள் கலந்து கொண்ட கோவை மாவட்ட கணபதி கிளைக் கூட்டம் சிறப்பாக நடந்தது. அஞ்சலி நிகழ்ச்சி தோழர் தங்கராஜ் நடத்தினார். வரவேற்புரை கிளைச் செயலாளர் தோழர். சந்திரன் தனது கருத்துக்களை பதிவு செய்து அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.
மாநில உதவித் தலைவர் தோழர் V. வெங்கட்ராமன் பல்வேறு நிகழ்வுகளை சுட்டி காட்டி வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட பொருளாளர் தோழர். N P ராஜேந்திரன், மாநில மகளிர் உபகுழு தோழியர் K. பங்கஜவல்லி வாழ்த்துரை வழங்கினர். DS/AGS தோழர். A.குடியரசு கோவை மாவட்ட, மாநில, அகில இந்திய சங்க செயல்பாடுகள், உறுப்பினர் சந்தேகங்களுக்கு பதில் அளித்து கருத்துரை வழங்கினார்.
இறுதியாக தோழர். முத்து பொருளாளர் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்




0 Comments