Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட குறிச்சி கிளை பொதுக்குழு கூட்டம்

 கோவை மாவட்ட குறிச்சி கிளை பொதுக்குழு கூட்டம்

 தோழர்களே
    சங்க இயக்க  வளர்ச்சிக்கு உதவிய இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றி







                 கோவை மாவட்ட குறிச்சி கிளை தோழர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் (இரண்டு மாதத்திற்கு ஒருமுறை) குனியமுத்தூர் பகுதியில் உள்ள CITU அலுவலகத்தில்    கிளைக் கூட்டம் நடத்துவது வழக்கம். CITU புதிய  கட்டிடப் பணிகள் துவங்கிவிட்ட நிலையில் குறிச்சி கிளை தோழர்கள் கூட்டம் நடத்த இயலவில்லை. பல இடங்களை அணுகி அனைவரையும் ஒன்றிணைக்க குறிச்சி கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர் உட்பட  முயற்சிகள் மேற்கொண்டனர். அந்த அடிப்படையில் நமது சங்க உறுப்பினர் தோழர் ஜெய்னுலாப்தீன் அவருக்குத் தெரிந்த பள்ளிவாசல்   ஹாலில் (திருமண மண்டபம்) கூட்டம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தார். தோழர் ஜெயினுலாபுதீன் இடத்தை ஏற்பாடு செய்து நமது இயக்க வளர்ச்சிக்கு  உதவியதின் காரணம் "நான் பெறாமலே கிடைத்த மகன் அல்லது மகள் என்று வைத்துக் கொள்ளலாம். சங்கம் எனக்கு பெற்றுக் கொடுத்த ஓய்வூதியமே எனது மகன் அல்லது மகள். மாதம்தோறும் என் வாழ்க்கை பாதுகாக்க ஓய்வுதியம் என்ற குழந்தையை என் கையில் கொடுத்தது  சங்கம். இதற்கு ஏதாவது நன்றி கைமாறு செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் விடை தான் இந்த ஹால். குறிச்சிகிளைப் பகுதி தோழர்கள் மின் வசதி, நாற்காலி வசதி, குடிநீர் அனைத்தையும் நீங்கள் இலவசமாக இங்கே எடுத்துக் கொள்ளலாம். அதே நேரத்தில் இயக்க வளர்ச்சிக்காக மாதம்தோறும் கிளைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று அவரது    வேண்டுகோளையும்  30.6.26 நடந்த கிளைக் கூட்டத்தில் தனது கருத்தை பதிவு செய்தார். குறிச்சி கிளைத் தோழர்கள் ஏற்பாடு செய்த ஜெயினுலாபுதீன் தோழருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். மாவட்ட சங்கத்தின் சார்பாக தோழருக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

தோழர்களே

      30.6.26ல் இஸ்லாமிய சகோதரர்கள் வழங்கிய பள்ளிவாசல் மற்றும் விசேஷ நிகழ்ச்சிக்கான ஹாலில் கிளைத் தலைவர் தோழர் கணேசன் அவர்கள் தலைமையில் 33 தோழர்கள் கலந்து கொண்ட கிளை கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது. தலைமை உரைக்கு பின் அஞ்சலி நிகழ்ச்சி தோழியர். சூரிய கலா சௌந்தர்ராஜன் நடத்திக் கொடுத்தார். செயலாளர் பஷீர் கிளைப் பிரச்சினை மற்றும் வந்திருந்த அனைத்து தோழர்களையும் வரவேற்று பேசினார். மாநில அமைப்பு செயலாளர் தோழர் P.M.  நாச்சிமுத்து மற்றும் மாநில மகளிர் அமைப்புக் குழு நிர்வாகி தோழியர் எஸ் மகுடேஸ்வரி வாழ்த்துரை வழங்கினர். 

       மாவட்டச் செயலாளர் A.குடியரசு தற்போதைய சூழ்நிலையில் நமது சங்கத்தின் நிகழ்வுகள் பற்றி எடுத்துரைத்தார். இறுதியில் அன்பு தேவன் விவாதத்தில் பங்கெடுத்தார். பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்று குறிச்சி கிளையில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்ட தோழர் பாலகங்காதரன் அவர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது  இறுதியாக கிளை பொருளாளர் தோழர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்

Post a Comment

0 Comments