Latest

10/recent/ticker-posts

AIBDPA TN மாநிலச் சங்க செய்திக் குறிப்புகள்

  AIBDPA TN மாநிலச் சங்க செய்திக் குறிப்புகள்



1) நொய்டா ஆதரவு நிதி


தோழர்களே, 

       நொய்டா ஆதரவு நிதி மாவட்டங்களிலிருந்து இதுவரை அனுப்பிய  பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது. இந்தத் தொகையினை நாம்  உடனடியாக CITU தமிழ் மாநில சங்கத்திடம் ஒப்படைக்க உள்ளோம்.  சில மாவட்டங்களிலிருந்து உறுப்பினர் எண்ணிக்கைக்கு குறைவாகவும், சில மாவட்டங்களிலிருந்து  நிறைவாகவும், வசூலித்து அனுப்பப்பட்டுள்ளது.  குறைவாக அனுப்பிய மாவட்டங்கள் மீதமுள்ள தொகையையும், நிறைவாக அனுப்பிய மாவட்டங்கள்  இன்னும் சற்று கூடுதலாகவும், உடனடியாக வசூலித்து மாநில சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டுகிறோம். 

இந்த நிதி உடனடியாக  CITU மாநிலச் சங்கத்திடம்  ஒப்படைக்கப்படும். 

இதுவரை நிதி வழங்கியவர்களுக்கு மாநிலச் சங்கத்தின் நெஞ்சார்ந்த நன்றி.

இதுவரை நொய்டா நிதி வழங்கிய மாவட்டங்கள் 

1 திருச்சி- 5,000, 

2.சேலம்- 11,800, 

3.ஈரோடு- 18,000,

4.வேலூர்- 15,000 

5.சென்னை- 3,000, 

6.கோவை-28600,

7.தருமபுரி -3000,

8.தூத்துக்குடி -7000,

9.கடலூர் -5000,

10.காரைக்குடி -1500,

11.திருநெல்வேலி -7250, 

12.நாகர்கோயில் -10000, 

13.பாண்டிச்சேரி -2000, ,

14.தஞ்சாவூர் -1600,

15.விருதுநகர் -5000,

16.கும்பகோணம் -1500,

17.மதுரை 5000,

2/6/2026 வரை 

மொத்த வரவு ரூபாய் 1,30,250/-


2) தோழர்  ஜாஃபர் அவர்களுக்கு வழியனுப்பும் நிகழ்வு...

              மாநில அமைப்புச்  செயலாளர் தோழர் முகம்மது ஜாஃபர்  அவர்கள் கடந்த ஏழு மாத காலமாக சென்னையில் இருந்து மாநிலச் சங்கப்  பணிகளைச் செய்து வந்தார்.

அவருடைய துணைவியார் திருமதி. மும்தாஜ் அவர்கள் பணி நிமித்தம் சென்னைக்கு மாற்றலாகி வந்ததனால் அவருடன் வந்து மாநிலச் சங்கப் பணிகளை செய்து வந்தார்.

கடந்த 30.5.26 அன்று திருமதி ஜாஃபர் அவர்கள் பணி ஓய்வு பெற்றுவிட்டார். ஆகவே அவர் மீண்டும் திருப்பூருக்கு செல்கிறார்.

             மாநிலச் சங்கத்திற்கு அவர் ஆற்றிய பணியினைப் பாராட்டி மாநிலச் சங்கத்தின் சார்பில் அவருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டது.  உடன் அவரது துணைவியார் திருமதி மும்தாஜ் அவர்களுக்கும் பணி ஓய்வு பெற்றமைக்காக மாநில சங்கத்தின் சார்பில் சால்வை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது. 

                     இந்த நிகழ்வில் தோழர் ஜாபர் அவருடைய மகனும்,  மத்திய சங்க அமைப்புச் செயலர் தோழர் பெர்லின் கனகராஜ் அவர்களும், மாநிலச் செயலாளர் தோழர் R.ராஜசேகர், தோழர்  R.சீனிவாசராகவன்,  சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் R.சிரில்ராஜ், தோழியர் பெர்லின் அவர்களுடைய மகனும் உடன் இருந்தார்கள். 

நிகழ்வு மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது பங்கேற்ற அனைவருக்கும் மாநிலச் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

3) IDA நிலுவைத் தொகை

ஜனவரி, பிப்ரவரி, மார்ச்  மாதங்களுக்கான IDA நிலுவைத்தொகை இன்று 3.6.26 முதல் பட்டுவாடா செய்யப்படும். 

தோழமையுடன்,
R.ராஜசேகர்
மாநிலச் செயலாளர்.
3.6.26

Post a Comment

0 Comments