Latest

10/recent/ticker-posts

AIBDPA TN - மாநிலச் சங்க மையக் கூட்டம் - 24. 6.26 - மதுரை.

  AIBDPA TN - மாநிலச் சங்க மையக் கூட்டம் - 24. 6.26 - மதுரை.


தோழர்களே,

              நமது AIBDPA தமிழ் மாநிலச் சங்கத்தின் மாநில மையக் கூட்டம் மதுரை IMA அரங்கில் 24.6.26 அன்று பிற்பகலில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் தோழர். C.ஞானசேகரன், மாநிலச் செயலாளர் தோழர். R.ராஜசேகர், அகில இந்திய துணைத் தலைவர் தோழர். S. மோகன் தாஸ்,  அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர். பெர்லின் கனகராஜ்,  மாநிலப் பொருளாளர் தோழர். A. இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

             கூட்டத்தில் எதிர் வரும் ஜூலை 18,19 தேதிகளில் சென்னையில் நடைபெற உள்ள  NCCPAவின் மத்திய செயற்குழு கூட்டம் மற்றும் FCPA வின் நிர்வாகிகள் கூட்டம், இவற்றை நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.  

                     இவை தொடர்பாக NCCPA வின் மாநிலக் குழுக்கூட்டம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.  முதலில் 40 முதல் 50 உறுப்பினர்கள் வரை கலந்து கொள்வார்கள் என்றும், அவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்று நம்மிடம் தெரிவிக்கப்பட்டது.  

               ஆனால் திடீரென்று, அகில இந்திய மையம் 18ஆம் தேதி காலை பொது அரங்கு நிகழ்வாக 300 தோழர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கின்ற காரணத்தால் செலவுகள் சற்று கூடுதலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. 

                     பொது அரங்கு உட்பட மொத்த நிகழ்வுக்கும் சுமார் 3 இலட்சம் ரூபாய் வரையில் செலவாகும் என்று கணக்கிடப் பட்டுள்ளது. 

             இந்தச் செலவுத் தொகையினை NCCPA மற்றும் FCPA அமைப்புகள் பகிர்ந்து கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் கூடுதல் செலவுச் சுமையை AIPRPA, மற்றும் AIBDPA மாநிலச் சங்கங்கள் ஏற்பது  என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

       இதனால் நமது மாநிலச் சங்கத்திற்கு 70 ஆயிரம் ரூபாய் வரையில் நிதி தேவைப்படுகின்றது. மாநிலச் சங்கத்தில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. 

                 மேலும் கூடுதல் நிதியை வழங்குவதற்கு மாநிலச் சங்க நிதி நிலை ஏதுவாக இல்லாத காரணத்தினால்,  மீதமுள்ள 40 ஆயிரம் ரூபாய் கூடுதல் நிதியினை பகிர்ந்தளித்து உதவி செய்யும்படி மாவட்டச் சங்கங்களிடம் வேண்டுகோள் வைப்பது என மாநில மையக் கூட்டம் முடிவெடுத்துள்ளது.  

                     அதனடிப்படையில் மாவட்டச் சங்கங்கள் குறைந்தபட்ச நிதி உதவியாக கீழ்கண்ட தொகையினை மாநிலச் சங்கத்திற்கு வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.  

                   வேலூர் மாவட்டச் சங்கம் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு 50  நினைவுப் பரிசாக பைகளை  நன்கொடையாகத் தருவதற்கு உடன்பட்டுள்ளதால்,  நன்கொடைத் தொகையினை வழங்குவதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

            எனவே மாவட்டச் செயலர்கள் இந்த நிதியளிப்பினை ஒரு சுமையாகக் கருத வேண்டாம். மத்திய அரசு, பொதுத்துறை ஓய்வூதியர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் NCCPA, FCPA அமைப்புகளுக்கு,  தமிழகத்தில் ஒரு அகில இந்திய செயற்குழு கூட்டம் நடத்துவது என்பது நமக்கு தரப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய கடமையாகக் கருத்தில் கொள்வோம்.  

                இதை நடத்தக்கூடிய ஒரு வரலாற்று சிறப்புமிக்க பணியினை தமிழகத்தில் மிக சிறப்பாக செய்வதற்கு AIBDPA என்றென்றும் முன்னிலை வகிக்கும் என்ற நோக்கில், இந்தச் சிறு தொகையினை மாவட்டங்கள் உடனடியாக மாநிலச் சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என தோழமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மாவட்டங்களுக்கான நிதி பங்களிப்பு வேண்டுகோள்..(ரூபாய்.)

1) கோவை - 6,000

2) ஈரோடு - 4,000

3) சேலம் - 4,000

4) மதுரை - 3,000 

5) விருதுநகர் - 2,500 

6) திருச்சி - 2,500 

7) நாகர்கோவில்- 2,500 

8) தூத்துக்குடி - 2,500

9) திருநெல்வேலி - 2,500 

10) தர்மபுரி - 2,000

11) கடலூர் - 2,000

12) சென்னை - 2,000 

13) பாண்டிச்சேரி - 2,000

14) குன்னூர் - 2,000 

15) கும்பகோணம் - 1,000

16) தஞ்சாவூர் - 1,000 

17) காரைக்குடி - 1,000

மொத்தம் ரூ 42,500.

தோழமை வேண்டுகோளுடன்,
R ராஜசேகர் 
மாநிலச் செயலாளர் 
AIBDPA TN
25.6.26

Post a Comment

0 Comments