Latest

10/recent/ticker-posts

AIBDPA – தமிழ்நாடு - இணைய வழி மாநில செயற்குழு கூட்டம் – 02.05.2026

 AIBDPA – தமிழ்நாடு - இணைய வழி மாநில செயற்குழு கூட்டம் – 02.05.2026 

தோழர்களே,

                  AIBDPA தமிழ்நாடு மாநில செயற்குழுக்  கூட்டம் 02.05.2026 அன்று மாலை 06:30 மணிக்கு இணைய வழியாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தோழர் C. ஞானசேகரன் தலைமை தாங்கினார்.  

1) நொய்டா தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டம், மற்றும் 

2) மே 9 அன்று இணைய வழியில், மே தின சிறப்புக்  கருத்தரங்கம் நடத்துவது 

ஆகிய ஆய்வுபடு பொருளை முன்வைத்து மாநிலச் செயலாளர் தோழர் R ராஜசேகர்  துவக்கவுரையற்றினார். 

                மாநில துணைத்  தலைவர் தோழர் P இந்திரா அவர்கள்  நொய்டா தொழிலாளர்களின் தொடர்ச்சியான போராட்டம் பற்றி விளக்கமான உரையாற்றினார்.

               மத்திய சங்க நிர்வாகிகள் தோழர்கள். A.குடியரசு, N.குப்புசாமி மற்றும் பெர்லின் கனகராஜ்,  மாநில ஆலோசகர் தோழர். CKN உள்ளிட்ட 37 பேர் கலந்து கொண்ட மாநில செயற்குழு கூட்டத்தில் மூன்று மத்திய சங்க நிர்வாகிகள் உட்பட 13 தோழர்கள் விவாதத்தில் கலந்து கொண்டனர்.  

முடிவுகள் :

1) நொய்டா தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும்  ரூபாய் 50/- நன்கொடை வழங்க வேண்டும் என்றும், அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் மாநில சங்கம் முடிவு செய்கின்ற தேதிகளில் மாவட்டங்கள் தோறும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

2) மே தினத்தை ஒட்டி, இணைய வழியாக சிறப்பு கருத்தரங்கத்தை வருகின்ற 9.5.26 அன்று  மாலையில் நடத்துவது என்றும், 

a) சிறப்புப் பேச்சாளராக CITU வின் மாநிலப்  பொதுச் செயலாளர் தோழர். கண்ணன் அவர்களை அழைப்பது என்றும், 

b) அந்தக்  கருத்தரங்கத்தில் குறைந்த பட்சம் 300 தோழர்கள் கலந்து கொள்ளும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் முயற்சி செய்ய வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

 இறுதியாக மாநில பொருளாளர் தோழர் A.இளங்கோவன் நன்றி கூற கூட்டம் நிறைவு பெற்றது.

தோழமையுடன்,
R. ராஜசேகர்
மாநில செயலாளர்
AIBDPA – தமிழ்நாடு
02.05.2026

Post a Comment

0 Comments