Latest

10/recent/ticker-posts

கோவை மாவட்ட கணபதி கிளை மாநாடு 30.5.26.

 கோவை மாவட்ட கணபதி கிளை மாநாடு 30.5.26.







தோழர்களே !!

              கோவை மாவட்டத்தில் முத்தாய்ப்பபானது முதல் (30.5.26) கணபதி கிளை மாநாடு. தோழர் கே. சந்திரசேகரன் அவர்கள் தலைமையில் கிளை மாநாடு துவங்கியது. தோழர். சீனிவாசன் DOS தேசியக்கொடி ஏற்றினார். தோழர். R. தங்கராஜ்  சங்க கொடி ஏற்றினார். அஞ்சலி தோழர். T.சசிதரன் நடத்தி முடித்தார். தலைவர் நிகழ்ச்சிகளை ஒப்புதல் பெற்றார். கிளைச் செயலாளர் தோழர். M.சந்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

               மாநாட்டு நிகழ்ச்சியை  தோழர். குடியரசு DS/AGS CHQ வாழ்த்துரை கருத்துக்களை பதிவு செய்து கிளை மாநாட்டை துவக்கி வைத்தார். தோழர் N. குப்புசாமி அகில இந்திய அமைப்புச் செயலாளர் சங்கம்  கடந்த வந்த பாதைகளை சுட்டிக்காட்டி வாழ்த்துரை வழங்கினார்.

              அறிக்கை வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஏக மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. கிளை நிர்வாகிகள் தேர்வு மாவட்ட செயலாளரால் நடத்தப்பட்டு ஏக மனதாக. கிளை  நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. வரும் ஆண்டுக்கு முக்கிய நிர்வாகிகளாக கிளை தலைவர் தோழர் K.  சந்திரசேகரன், கிளை செயலாளர் தோழர் M. சந்திரன், கிளை பொருளாளர் தோழர்.K. முத்து ஆகியோர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

        தேர்வு செய்யப்பட்ட புதிய கிளை நிர்வாகிகளுக்கு மாவட்ட சங்கத்தின் மற்றும் அகில இந்திய சங்கத்தின் புரட்சிகரமான வாழ்த்துக்கள்.

        தோழர்கள் T.K.பிரசன்னன் மாநில உதவி செயலாளர்  A.S.சாகின் அகமது, BSNLEU மாவட்ட பொருளாளர்,  V.வெங்கட்ராமன் மாநில உதவி செயலாளர், P.M.நாச்சிமுத்து மாநில அமைப்புச் செயலாளர், S. மகுடீஸ்வரி மாநிலச் சங்க மகளிர் உபகுழு, B. நிசார் அகமது மாநில உதவி தலைவர், N.P.இராஜேந்திரன் மாவட்ட பொருளாளர், அப்துல் முத்தலிப் TNTCWU மாவட்ட செயலாளர்  ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். வந்திருந்த அனைத்து தலைவர்களும் சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சி முடியும் முன்பாக கலந்து கொண்ட  அனைத்து உறுப்பினர்களுக்கும், கிளைச்சங்கத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

             இறுதியாக கிளை பொருளாளர் தோழர் ராஜு  நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.

A.குடியரசு, மாவட்ட செயலாளர், கோவை மாவட்டம்.

Post a Comment

0 Comments