Latest

10/recent/ticker-posts

தியாகத்திற்கு தயாராகுங்கள் – ஓய்வூதியர்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடுவோம் !!

 AIBDPA TN,

  தியாகத்திற்கு தயாராகுங்கள் – ஓய்வூதியர்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடுவோம் !!

தோழர்களே,

                2026 ஏப்ரல் 16 அன்று CCA/BSNL அலுவலகங்கள் முன்பு நடைபெறும் போராட்டக் கூட்டங்கள், ஓய்வூதியர்களின் இருப்பை உறுதி செய்யும் வலுவான போராட்ட இயக்கத்தின் எச்சரிக்கை மணி.

           கிட்டத்தட்ட அனைத்து BSNL/MTNL ஓய்வூதியர் சங்கங்களும் ஒன்றிணைந்து, மத்திய அரசின் மோசமான திட்டங்களை எதிர்த்து முறியடிக்க  முனைந்துள்ளன.

ஓய்வூதியர்களுக்கு எதிரான சமீபத்திய தாக்குதல், DA/DR-ஐ முடக்குவதற்கான சதித்திட்டமாகும்.

                   நுகர்வோர் விலைச் குறியீீட்டெண் (CPI) உயர்வதற்கேற்ப DA/DR-ஐ உயர்ந்த விகிதத்தில் வழங்குவது, பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கடின உழைப்பால் பெற்ற உரிமையாகும்.

           27 பிப்ரவரி 2026 அன்று DPE வெளியிட்ட IDA/DR வழங்கல் குறித்த உத்தரவு, அதனை PSU-வின் லாபம்/நட்டத்துடன் இணைத்தது ஆச்சரியமளிப்பதல்ல. இது Validation Act 2025 அமலாக்கத்தாலும், 8வது ஊதியக் குழுவின் ஓய்வூதியருக்கு விரோதமான Terms of Reference (TOR) மூலமாகவும் மத்திய அரசு திட்டமிட்ட பாதையின் ஒரு பகுதியாகும்.

01.01.2017 முதல் ஓய்வூதிய திருத்தம் வழங்கப்படுவது அற்ப காரணங்களைக் கூறி மறுக்கப்படுகிறது.

03.04.2026 அன்று நடைபெற்ற 12 அகில இந்திய BSNL/MTNL ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டம், நிலைமையை தீவிரமாக பரிசீலித்து, கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது:

16.04.2026 அன்று CCA/BSNL அலுவலகங்கள் முன்பு போராட்டக் கூட்டம்.

30.04.2026 அன்று CCA/BSNL அலுவலகங்கள் முன்பு மாபெரும் தர்ணா.

  அனைத்து CHQ நிர்வாகிகள், மாநில செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொரு ஓய்வூதியரையும் நேரில் சந்தித்து, இந்த ஆபத்தான நிலையை விளக்கி, இந்த போராட்டங்களை வெற்றிகரமாக்க வேண்டும்.

AIBDPA நிர்வாகிகள், மாநில/மாவட்ட மட்டங்களில் இன்னும் கூட்டங்கள் நடத்தப்படாத இடங்களில் உடனடியாக கூட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

தோழமையுடன்,
R. முரளீதரன் நாயர்
பொதுச் செயலாளர்
AIBDPA CHQ 
11.4.26.

Post a Comment

0 Comments