Latest

10/recent/ticker-posts

நெல்லை மாவட்டம் பாளை கிளையின் 3 வது கிளை மாநாடு

 நெல்லை மாவட்டம் பாளை கிளையின் 3 வது கிளை மாநாடு




வணக்கம் தோழர்களே...!!! 

                         11-04-2026 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் பாளையங்கோட்டை, தியாகராஜநகர் தமிழ் நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு கட்டிடத்தில் வைத்து பாளையங்கோட்டை கிளையின் 3வது கிளை மாநாடு நடைபெற்றது.

               மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக நமது AIBDPA சங்க கொடியை பாளையங்கோட்டை கிளைத் தலைவர் தோழர். D. சந்திரபோஸ் விண் அதிரும் கோஷங்களுக்கிடையே  ஏற்றி வைத்தார். மேலும் மாநாட்டுக்கு தோழர்.D. சந்திரபோஸ்கிளைத் தலைவர் தலைமை தாங்கினார். தோழர் S. தங்கசாமி, கிளை உதவி தலைவர் அஞ்சலி உரையாற்றினார். தோழர். P.சூசை  கிளைச் செயலர் வரவேற்புரையாற்றினார்.

                      தோழர். S.முத்துசாமி, மாவட்ட செயலாளர் துவக்க உரையாற்றினார். தோழர். S. நடராஜா, மாநில உதவி தலைவர் சிறப்புரையாற்றினார். TNTCWU மாவட்ட செயலாளர் தோழர். P.ராஜகோபால், தோழர். R. ராமநாதன், மாநில தணிக்கையாளர், மாவட்ட தலைவர் தோழர் M.கனகமணி, மாவட்ட பொருளாளர் தோழர். S. சங்கரநாராயணன், மாவட்ட உதவி செயலாளர்கள் தோழர் R. M. கிறிஸ்டோபர், தோழர். V.சீதாலட்சுமி, மாவட்ட அமைப்பு செயலாளர் தோழியர் J.மரிய சுந்தரம், AIBDPA கிளைச் செயலாளர்கள் தோழர் S. P. கணேசன்( அம்பை), தோழர் A. பிச்சுமணி (வள்ளியூர்), தோழர் D.கிறிஸ்டோபர் ராஜதுரை (சங்கரன்கோவில்), தோழர் S.செல்லத்துரை (நெல்லை), தோழர் K.கணேசன் (தென்காசி) மற்றும் தோழர் ராமநாதன், மாவட்ட அமைப்பு செயலாளர்  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

           தோழர் முத்து சுப்பிரமணியன் தியாகராஜநகர் வார்டு மாமன்ற உறுப்பினர் நமது மாநாட்டில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

           கலந்து கொண்ட அனைவருக்கும் மாநாட்டு நினைவு பரிசாக ஒரு பேக் வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. ஆண்டறிக்கையும் நிதிநிலை அறிக்கையும் ஒப்புதல் பெறப்பட்டது. பின்னர் புதிய  நிர்வாகிகள் தேர்வினை மாவட்ட செயலாளர் தோழர் S.முத்துசாமி நடத்தினார். தோழர். D.சந்திரபோஸ் கிளைத் தலைவர், தோழர். P.சூசை  கிளைச் செயலாளர், தோழர். S.சங்கரநாராயணன் கிளைப் பொருளாளர் உள்ளிட்ட 13 தோழர்கள் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர்.

 மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக தோழர்.  C. காளத்தியப்பன் கிளை அமைப்பு செயலாளர் நன்றி  கூறினார்.

தோழமையுடன்,
 P.சூசை ,
கிளைச் செயலர்,
பாளையங்கோட்டை   கிளை,
திருநெல்வேலி  மாவட்டம்.
11 -04-2026.

Post a Comment

0 Comments