சிறப்பாக நடைபெற்ற நெல்லை மாவட்ட அம்பை கிளையின் 3 வது கிளை மாநாடு
வணக்கம் தோழர்களே...!!!
அம்பாசமுத்திரம் கிளையின் 3வது கிளை மாநாடு 17-03-2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தோழர்கள் S. சுந்தரராஜன் மற்றும் V. S. வேம்புராஜா அவர்களின் நினைவரங்கம், மாவட்ட உதவி தலைவர் தோழர் C.சுவாமிகுருநாதன் இல்லம், அம்பாசமுத்திரத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு கிளைத் தலைவர் தோழர் P. முருகன் தலைமை தாங்கினார்.
மாவட்ட உதவித் தலைவர் தோழர் C.சுவாமிகுருநாதன் அஞ்சலி உரையாற்றினார். கிளைச் செயலர் தோழர் S. P.கணேசன்* வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் S.முத்துசாமி மாவட்ட செயலாளர் துவக்க உரையாற்றினார். அகில இந்திய உதவி தலைவர் தோழர் S. மோகன்தாஸ் மற்றும் மாநில உதவி தலைவர் தோழர் S. நடராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாவட்ட தலைவர் தோழர் M.கனகமணி, மாவட்ட உதவி செயலாளர் தோழர் R.M.கிறிஸ்டோபர், BSNLEU மாவட்ட செயலாளர் தோழர் N. சூசை மரிய அந்தோணி வியாகப்பன், TNTCWU மாவட்ட செயலாளர் தோழர் P.ராஜகோபால்,TNTCWU மாநில சங்க நிர்வாகி தோழர் மாரி, சங்கரன்கோயில் கிளைச் செயலாளர் தோழர் D.கிறிஸ்டோபர் ராஜதுரை, வள்ளியூர் கிளைச் செயலாளர் தோழர் A.பிச்சுமணி, பாளையங்கோட்டை கிளைச் செயலாளர் தோழர் P.சூசை, திருநெல்வேலி கிளைச் செயலாளர் தோழர் S.செல்லத்துரை, தென்காசி கிளைச் செயலர் தோழர் K.கணேசன், மாவட்ட தணிக்கையாளர் தோழர் M.முத்தையா மாவட்ட உதவி தலைவர் தோழர் R. ராமநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாவட்ட உதவி தலைவர் தோழர் C.சுவாமிகுருநாதன் அமைப்பு நிலை விவாதத்தை துவக்கி வைத்தார். சில தோழர்கள் அமைப்பு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர். ஆண்டறிக்கையும் வரவு செலவு கணக்கு அறிக்கையும் ஏகமானதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. புதிய நிர்வாகிகள் தேர்தலை மாவட்ட செயலர் தோழர் S. முத்துசாமி நடத்தினார்.
கிளைத் தலைவராக தோழர் P. முருகன், கிளச் செயலாளராக தோழர் S. P. கணேசன், கிளை பொருளாளராக தோழர் V. கல்யாணி உட்பட 11 தோழர்கள் புதிய நிர்வாகிகளாக ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டின் நினைவுப் பரிசாக அனைவருக்கும் ஒரு பேக் மற்றும் ஒரு புத்தகம் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு வாய்ந்த கிளைமாநாட்டை தனது இல்லத்தில் நடத்த அனுமதி கொடுத்த மாவட்ட உதவி தலைவர் தோழர் C. சுவாமிகுருநாதன் அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்திற்கு 4 பெண் தோழர்கள் உட்பட 50 தோழர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கிளைப் பொருளாளர் தோழர் V.கல்யாணி நன்றி கூறினார்.
S. P. கணேசன் ,
அம்பாசமுத்திரம் கிளை,
திருநெல்வேலி மாவட்டம்.
17-03-2026.




0 Comments