Latest

10/recent/ticker-posts

BSNLEU - AIBDPA - TNTCWU ஒருங்கிணைப்பு குழு புதுச்சேரி சார்பில் சிறப்பு கருத்தரங்கம் !

 BSNLEU - AIBDPA - TNTCWU   ஒருங்கிணைப்பு குழு புதுச்சேரி சார்பில் சிறப்பு கருத்தரங்கம் !






BSNLEU - AIBDPA - TNTCWU  ஒருங்கிணைப்பு குழு புதுச்சேரி 

                ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக புதுச்சேரி இன்று (04.02.2026)   மெயின் தொலைபேசி நிலைய கான்பிரன்ஸ் ஹாலில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட  தோழர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் தோழர். V.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். கன்வீனர் தோழர் A.சுப்ரமணியன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

                  சிறப்புரையாக BSNLEU  அகில இந்திய துணைத் தலைவர் தோழர். P.அபிமன்யு ஊதிய மாற்ற ஒப்பந்தம் தொடர்பாகவும் மற்றும் 12-02-2026ல் நடைபெறவுள்ள அகில இந்திய பொது வேலைநிறுத்தம் சம்பந்தமாக விரிவாக விளக்கி பேசினார் 

AIBDPA மாநில  அமைப்புச் செயலாளர்  தோழர். V. ராமகிருஷ்ணன்லஓய்வூதிய மாற்றம் இன்றைய மத்திய அரசின் அணுகுமுறை என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்

AIBDPA சங்கத்தின் மாவட்ட செயலர் தோழர் V.ராமகிருஷ்ணன் நன்றி கூறி கருத்தரங்கத்தை  முடித்து வைத்தார். கலந்துகொண்டு  சிறப்பித்த அனைவருக்கும் ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் 


           தோழமையுடன்,
           A, சுப்ரமணியன்
      கன்வீனர் ஒருங்கிணைப்பு குழு புதுச்சேரி

Post a Comment

0 Comments