சிறப்பாக நடைபெற்ற கோவை மாவட்ட மகளிர் அமைப்பு கூட்டம்
தோழர்களே !!
04.02.2026 அன்று 10 மகளிர் தோழர்கள் கலந்து கொண்ட கோவை மாவட்ட மகளிர் அமைப்பு கூட்டம் தோழர். சுப்புலட்சுமி கிளைத் தலைவர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தலைமை உரைக்குப் பின் தோழியர். சூரியகலா கிளை செயலாளர் அனைவரையும் வரவேற்றதோடு அகில இந்திய மாநாடு சிறப்பு அம்சங்களை கூறி, மாவட்டச் செயலாளர் அகில இந்திய சங்கத்திற்கு தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், மார்ச் 8 சர்வதேச மகளிர் தினம் கொண்டாடுவது பற்றியும் கருத்துக்களை பதிவு செய்தார்.
தோழியர். மகுடேஸ்வரி அகில இந்திய மாநாட்டின் சிறப்பு அம்சங்களை பற்றியும் நமது மாவட்ட செயலாளர் அகில இந்திய துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்தது பற்றியும் வாழ்த்தியும், மார்ச் 8 பற்றியும் தனது கருத்துக்களை பதிவு செய்தார். மாவட்ட செயலர் தோழர். A.குடியரசு வருகின்ற பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற இருக்கும் பொது வேலை நிறுத்தம் சம்பந்தமாக, ஓய்வூதிய சட்டம் மறு சீராய்வு கிளையில் வந்த பிரச்சினைகள், சர்வதேச மகளிர் தினம் பற்றியும் தனது கருத்துக்களை கூறி பதிவு செய்தார்.
மகளிர் அமைப்பு கிளையின் சார்பாக தோழர். A.குடியரசு AGSஆக தேர்வு செய்ததற்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். கூட்டத்தின் முடிவாக சர்வதேச மகளிர் தினம் நடத்துவதற்கு ஆலோசனைக் குழு கிளை தலைவர், செயலாளர், உதவி செயலாளர் தோழியர் பங்கஜவள்ளி, மற்றும் தோழியர்கள் மகுடீஸ்வரி, விஜயகுமாரி, லோகாம்பாள் மற்றும் ராஜாமணி ஆகியோர் மகளிர் சர்வதேச தின நிகழ்ச்சி முடிவெடுப்பதற்கு ஆலோசனைக் குழுவாக அமைக்கப்பட்டது. மாவட்டச் செயலர் இந்தக் குழுவிற்கு ஆலோசகராக செயல்படுவார் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக தோழர். லோகாம்பாள் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
A.குடியரசு மாவட்ட செயலாளர் கோவை மாவட்டம்




0 Comments