Latest

10/recent/ticker-posts

AIBDPA திருநெல்வேலி மாவட்ட விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்

 AIBDPA திருநெல்வேலி மாவட்ட விரிவடைந்த மாவட்ட செயற்குழு கூட்டம்







வணக்கம் தோழர்களே...!!!

             05-02-2026 வியாழக்கிழமை காலை 10 மணியளவில், தமிழ்நாடு மின் வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு கட்டிடம்(CITU) ஒன்றாவது வடக்குத் தெரு, (Near Anbunagar Railway Gate) தியாகராஜநகர், பாளயங்கோட்டையில் நமது நெல்லை மாவட்ட விரிவடைந்த செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்  தோழர். M. கனகமணி, தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் தோழர். S. சங்கரநாராயணன் அஞ்சலி உரையாற்றினார். மாவட்ட உதவி செயலாளர் தோழர். R. M. கிறிஸ்டோபர் வரவேற்புரையாற்றினார்.

                         மாநில உதவி தலைவர் தோழர். S.நடராஜா துவக்கவுரையாற்றினார். தனது உரையில் கோவையில் 2025 டிசம்பர் 17,18 தேதிகளில் நடைபெற்ற நமது சங்கத்தின் 5 வது அகில இந்திய மாநாட்டின் சிறப்பு பற்றி மிகவும் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் பெப்ரவரி 12 ல் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் பற்றி விரிவாக எடுத்துரைத்ததுடன் நாம் அதில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

         நமது  சங்கத்தின் கூட்டங்கள் நடத்த தங்களது கட்டிடத்தை குறைந்த வாடகைக்கு கொடுத்து உதவும் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சங்கத்தின் துணை பொது செயலாளர் தோழர். ராஜாமணி அவர்களுக்கு 86 வயது பூர்த்தி ஆனதை பெருமைப்படுத்தும் வகையில்  அவர்களை நமது சங்கத்தின் சார்பாக மாவட்ட உதவி தலைவர் தோழர். C. சுவாமி குருநாதன் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினார்.

        அதன்பின் மாவட்ட செயலாளர் தோழர். S. முத்துசாமி ஆய்படுபொருள் அறிமுகவுரையாற்றினார்.

தமிழ் மாநில தணிக்கையாளர் தோழர். R.ராமநாதன், BSNLEU மாவட்ட செயலாளர் தோழர் NSMAV மற்றும் TNTCWU மாவட்ட செயலாளர் தோழர். P.ராஜகோபால் வாழ்த்துரை வழங்கினர்.

             அமைப்பு நிலை விவாதத்தில் திருநெல்வேலி கிளைத் தலைவர் தோழர் அய்யம்பிள்ளை, தென்காசி கிளைச் செயலர் தோழர். K. கணேசன், பாளையங்கோட்டை கிளைச் செயலாளர் தோழர். P. சூசை, வள்ளியூர் கிளைச் செயலாளர் தோழர். A.பிச்சுமணி, அம்பாசமுத்திரம் கிளைச் செயலாளர் தோழர். S. P. கணேசன், சங்கரன்கோவில் கிளைச் செயலாளர் தோழர். D.கிறிஸ்டோபர் ராஜதுரை மற்றும் மாவட்ட சங்க நிர்வாகிகள் தோழர்கள் C.சுவாமிகுருநாதன், R. M.கிறிஸ்டோபர்,  R.ராமநாதன், V.சீதாலட்சுமி மற்றும் நமது மாவட்ட தணிக்கையாளர் M.முத்தையா ஆகியோர் கலந்து கொண்டு தங்களின் கருத்தை பதிவு செய்தனர்.

நிதிநிலை அறிக்கை பற்றி மாவட்ட பொருளாளர் *தோழர் S.சங்கரநாராயணன்* கூறினார்.

இரண்டும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 தீர்மானங்கள்:-

==============

1.கோவையில் 2025 டிசம்பர் 17,18 தேதிகளில் நடைபெற்ற நமது சங்கத்தின் 5 வது அகில இந்திய மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்திய மாநில சங்கத்திற்கும் கோயம்புத்தூர் மாவட்டச் சங்கத்திற்கும் பாராட்டுகள் வாழ்த்துதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

2. February 12 பொது வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக ஆக்குவது.

3. கிளை மாநாடுகளை மாவட்ட சங்கத்துடன் கலந்து ஏப்ரல் மாதத்துக்குள் நடத்த வேண்டும்.

4. மாவட்ட மாநாட்டினை மாநில சங்கத்துடன் கலந்து ஜூன் மாதத்திற்கு மேல் நடத்திட வேண்டும்.

5. பென்ஷன் திருத்த மசோதா ரத்து செய்ய வேண்டும்.

6. எட்டாவது சம்பள கமிஷன் Terms of Reference வழிகாட்டு நெறிமுறைகளை திருத்தி அமைக்க வேண்டும்.

 ஆகிய தீர்மானங்கள் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட செயலாளர் தோழர் S. முத்துசாமி அவர்களின் தொகுப்புரைக்குப்பின், நிறைவாக மாவட்ட உதவி செயலர் தோழர் V.சீதாலட்சுமி நன்றி கூறினார்.

தோழமையுடன்,
ச. முத்துசாமி,
மாவட்ட செயலாளர்,
AIBDPA,
திருநெல்வேலி மாவட்டம்.
06-02-2026.

Post a Comment

0 Comments