FCPA-சார்பாக திருச்சியில் மண்டல கருத்தரங்கம்
அன்பார்ந்த தோழர்களே !! வணக்கம்.
எப் சி பி ஏ (FCPA) மாநில அமைப்பின் முடிவின்படி மண்டலக் கருத்தரங்கம் இன்று(27/1/2026) திருச்சி பொன்மலை ஆர்மரி கேட் டி ஆர் இ யு (DREU )அலுவலகத்தில் நடைபெற்றது.
தோழர். N.ராஜகோபால் தலைவர் FCPA தலைமை தாங்கினார். தோழர். S.அஸ்லம் பாஷா கன்வீனர் FCPA வரவேற்புரையாற்றினார். தோழர். S. ரெங்கராஜன் மாவட்ட செயலர் CITU, தோழர். G.ராமராஜூ மாவட்ட பொருளாளர் AITUC, தோழர். M.ரவீந்திரன் அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் (TEPU), தோழர். K.வெங்கட்நாராயணன் மாவட்ட தலைவர் (INTUC) ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
தோழர். K.லெனின் WORKSHOP DIVISIONAL PRESIDENT ( DREU), தோழர் N.கோபால்சாமி மாவட்டச் செயலாளர் (NCCPA)ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் DRPU, AIBDPA, AIBSNLPWA, AIPRPA, ITPA, SNPWA, TPPO, TNEBPWO, AIIPA, RPFPWA, SCPWA, REPU ஆகிய சங்கங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
கருத்தரங்கம் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய DREU நிர்வாகிகள் மற்றும் அனைவரையும் வரவேற்று உபசரித்த DRPU தோழர்கள் உள்பட கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் FCPA மாவட்ட பொருளாளர் தோழர். K. சத்தியமூர்த்தி நன்றி கூறினார்.
N. ராஜகோபால் தலைவர்
S.அஸ்லம்பாஷா கன்வீனர்
K.சத்தியமூர்த்தி பொருளாளர்
FCPA திருச்சி




0 Comments