FCPA Tamilnadu தமிழகத்தை உற்று நோக்க வைத்த ஓய்வூதியர் ஒற்றுமை...,!!!
தோழர்களே !
ஓய்வூதிய திருத்தச் சட்டம் 2025ஐ திரும்பப் பெறக் கோரியும், எட்டாவது ஊதியக் குழுவின் செயல் குறிப்பில் ஓய்வூதியர்களையும் இணைக்கக் கோரியும், Unfunded cost of non contributed pension schemes, என்று குறிப்பிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு முடிவு கட்ட நினைக்கும் குறிப்பாணையை எதிர்த்தும்,
09901.2026 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்திற்கு FCPA அமைப்பின் சார்பாக அறைகூவல் விடுக்கப்பட்டிருந்தது. இந்த இயக்கம் தேசிய அளவிலும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், மிகவும் எழுச்சியோடு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.
இந்திய தேசத்தில் ஜம்மு-காஷ்மீர், அஸ்ஸாம், மணிப்பூர், மாநிலங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இந்த இயக்கம் வெற்றிகரமாக நடந்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் NCCPA, FCPA அமைப்புகளின் சார்பாக இந்தப் போராட்டம், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஓய்வூதியர்களின் முழுமையான பங்கேற்புடனும், ஒற்றுமை உணர்வுடனும், வெற்றிகரமாக நடைபெற்று இருக்கிறது. இதில் அனைத்து ஓய்வூதியர் சங்கங்களும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
பல இடங்களில் FCPA வில் அங்கம் வகிக்காத மாநில அரசு ஓய்வூதியர் சங்கங்களும், LIC, வங்கி, மாநில பொதுத்துறை ஓய்வூதியர்கள், என பல்வேறு சங்கங்களிலிருந்தும் ஓய்வூதியர்கள் இந்தப் போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இது இந்த இயக்கத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். செய்தி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்ற போராட்ட செய்தியை வெளியிட்டு, இந்தப் போராட்டத்தின் அவசியத்தை உணர்த்தியுள்ளனர்.
இன்று ஏற்பட்டிருக்கும் இந்த ஒற்றுமை குலையாமல் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, எதிர் வரும் இயக்கங்களை முன்னெடுத்து செல்ல வேண்டியது மிக, மிக அவசியமாகும்.
மேலும் நமது நியாயமான கோரிக்கைகளை மக்கள் மத்தியில் விரிவாக கொண்டு செல்லும் பொருட்டு, 20.1.2026 அன்று காலை 11 மணியளவில் மாநில கூட்டமைப்பு சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு சேப்பாக்கம் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெறும்.
அடுத்து நடைபெற இருக்கும் *மண்டலக் கருத்தரங்கங்களை*, சேலம், திருச்சி, மதுரை ஆகிய மூன்று மண்டலங்களில் நடத்த மாநில FCPA அமைப்பு திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 13ஆம் தேதி அன்று சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் மாநிலம் தழுவிய தர்ணா இயக்கத்தையும்,
27.02.25 அன்று மாநிலம் தழுவிய சிறப்புக் கருத்தரங்கத்தை சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடத்துவதற்கும், மாநில FCPA அமைப்பு முடிவெடுத்துள்ளது.
இந்த இயக்கங்கள் அனைத்தையும் நாம் வெற்றிகரமாக நடத்த வேண்டும் என உறுதி பூணுவோம்.
ஓய்வூதியர் ஒற்றுமையைக் வலுப்படுத்துவோம்!!
ஓய்வூதியத்தைப் பாதுகாத்திடுவோம்!!!
தோழமை வாழ்த்துக்களுடன்,
D பாலசுப்ரமணியம், தலைவர்,
FCPA தமிழ் நாடு,
*R ராஜசேகர்,*
மாநில கன்வீீனர்,
FCPA தமிழ் நாடு,
*C. ஒளி,*
மாநிலப் பொருளாளர்,
FCPA தமிழ்நாடு.
10.1.26
0 Comments