Latest

10/recent/ticker-posts

சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம்

சிறப்பாக நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம்






தோழர்களே ! வணக்கம். 

               தூத்துக்குடி மாவட்ட செயற்குழு கூட்டம் 06.01.2026 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணி அளவில் தூத்துக்குடி  மாசிலாமணிபுரம் 3வது தெருவிலுள்ள PCV அரங்கில் வைத்து சிறப்பாக நடைபெற்றது. செயற்குழு கூட்டத்தை மாவட்டத் தலைவர் தோழர். T. சுப்பிரமணியன் தலைமை ஏற்று நடத்தினார். நிகழ்ச்சிநிரல் ஒப்புதலுக்கு பின்   மாவட்ட உதவிச்செயலர் தோழர். K. சுப்பையா  அஞ்சலி உரை நிகழ்த்தினார்.  கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை வரவேற்று மாவட்ட உதவிச்செயலர் தோழர். V. குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார்.


             AIBDPA அகில இந்திய துணைத்தலைவர் தோழர். S. மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினார். அவர் தனது உரையில் 5வது AIC, இன்றைய  பென்சனுக்கான ஆபத்து நிலை,  NCCPA FCPA இயக்கங்கள் அதன் பல கட்ட போராட்டங்கள், இன்றைய அரசியல் சூழல்,  அமெரிக்க அடாவடித்தனம், வரி விதிப்பு பிரச்சினைகளை விரிவாக எடுத்துரைத்தார். 

           மாவட்டச் செயலர் தோழர். P. ராமர் கோவையில் நடைபெற்ற அகில இந்திய மாநாடு,  NCCPA - FCPA இயக்கங்கள், கிளைகளை புணரமைத்து  மாநாடுகளை நடத்துவது, செயல்பாட்டு அறிக்கையை முன் வைத்து பேசினார். மேலும் தோழர்களின் கேள்விக்கான விபரங்களையும் விளக்கினார்.

   செயல்பாட்டு அறிக்கை ஏற்பிற்குபின் கையெழுத்து இயக்கத்தை சிறப்பாக நடத்துவது என்றும், ஜனவரி பெப்ரவரி மாதங்களில் கிளைகளை புணரமைத்து மாநாடுகளை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. 

          மாவட்ட சங்க நிர்வாகிகள் மற்றும் கிளைச் செயலர்கள் என 19 தோழர்கள் கலந்து கொண்ட கூட்டத்தின் நிறைவாக மாவட்ட பொருளாளர் தோழர். K.கணேசன் நன்றி கூற கூட்டம் நிறைவுற்றது.

 

தோழமையுடன்,

பெ. ராமர்

மாவட்டச் செயலர்

தூத்துக்குடி மாவட்டம்

Post a Comment

0 Comments