AIBDPA TN - சுற்றறிக்கை எண் 33/25
இணைய வழி மாநில செயற்குழு கூட்டம் 08.12.2025
தோழர்களே,
.. AIBDPA தமிழ் மாநில சங்கத்தின் இணைய வழி செயற்குழுக் கூட்டம் 8.12.25 அன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் தோழர்.சி.ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாநிலச் செயலர் தோழர். ஆர்.ராஜசேகர் செயற்குழுவின் ஆய்வுபடு பொருளை குறித்து விளக்கமாக பேசினார்.
பின்னர் கோவை மாவட்ட செயலர் தோழர். A.குடியரசு வரவேற்பு குழுவின் செயல் தலைவர் தோழர். V.வெங்கடராமன், இவர்களுடன் மாநிலச் செயலாளர் தோழர். R. ராஜசேகர் ஆகியோர் கோவையில் நடைபெற உள்ள அகில இந்திய மாநாட்டுக்கான தயாரிப்பு பணிகள் குறித்து எடுத்துரைத்தனர்.
சார்பாளர்கள், பார்வையாளர்களை தங்க வைப்பதற்கான அறைகளை உறுதி செய்ய, மாவட்ட செயலர்கள் உடனடியாக சார்பாளர்கள், பார்வையாளர்கள், மற்றும் தன்னார்வலர்களின் எண்ணிக்கையை மாவட்ட செயலர்கள் உடனடியாக தெரிவிக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தனர்.
மாநாட்டில் இடம்பெறக்கூடிய கலை நிகழ்ச்சிகளை பற்றிய ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த மொழிபெயர்ப்பு மென்பொருளில் சில சிக்கல்கள் உள்ளதால் மொழிபெயர்ப்பு மென்பொருள் மாநாட்டில் பயன்படுத்தப்படுவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.
மாநில பொருளாளர் தோழர் A.இளங்கோவன் மாவட்ட வாரியாக நன்கொடை வசூல் பற்றிய தகவல்களைத் தெரிவித்தார். பிற மாநிலங்களில் இருந்து வந்த நன்கொடைகளின் தகவல்களையும் தெரிவித்தார். இன்னும் ஐந்து மாவட்டங்கள் மட்டும் தங்களது இலக்கை பூர்த்தி செய்யவில்லை என்ற தகவலை தெரிவித்தார்.
விவாதங்களில் 18 மாவட்ட செயலாளர்கள் சில மாநில சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அகில இந்திய அமைப்புச் செயலர் தோழர் V.வெங்கட்ராமன், அகில இந்திய துணைத் தலைவர் தோழர் S.மோகன் தாஸ், மகளிர் ஓய்வூதியர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழியர் V.P.இந்திரா ஆகியோர் தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
விவாதங்களுக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
1) நன்கொடை இலக்கினை பூர்த்தி செய்யாத மாவட்டங்கள் உடனடியாக பூர்த்தி செய்ய வேண்டும்.
2) கே ஜி போஸ் அவர்களின் நினைவு நாளான டிசம்பர் 11 அன்று, அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, ஐந்து கொடிகள் ஏற்றும் நிகழ்வை அனைத்து கிளைகளிலும் தமிழகம் எங்கும் செயல்படுத்த வேண்டும். மாவட்டச் செயலர்கள் நிகழ்வின் புகைப்படங்களை ஒரு கிளைக்கு ஒரு புகைப்படம் என்ற முறையில் மாநில சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
3) சார்பாளர்கள், பார்வையாளர்கள், மற்றும் தன்னார்வலர்கள், முதல் நாள் பொது அரங்கில் பங்கேற்பவர்கள் பட்டியலை மாவட்ட செயலாளர்கள் உடனடியாக மாநில சங்கத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இது மாநாட்டில் தங்குமிட ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்ய ஏதுவாக இருக்கும்.
4) கொடி மற்றும் ஜோதி பயணங்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி, தேசியக்கொடி வேலூரில் இருந்தும், சங்க கொடி திருமெய்ஞானத்திலிருந்தும், மதச்சார்பின்மை ஜோதிப்பயணம் கன்னியாகுமரி காந்திசிலையில் இருந்தும் மாநாட்டிற்கு பிரச்சார பயணமாக எடுத்து வருவதற்கான ஏற்பாடுகளை உரிய மாவட்டங்கள் சிறப்பான முறையில் செய்ய வேண்டும்.
பிரச்சார பயண வழியில் உள்ள மாவட்டங்கள் பிரச்சார பயணத்தினரை தங்கள் பகுதியில் வரவேற்று உபசரிக்க தேவையான ஏற்பாடுகளை திட்டமிட வேண்டும்.
5) கோவையில் மாநாடு துவங்கும் 17.12.25 அன்று காலை சின்னியம்பாளையத்திலிருந்து, கொடி, ஜோதிப் பயணம் மாநாட்டு அரங்கினை வந்து அடையும். கொடியேற்றும் நிகழ்வில் லெசிம் கலைக்குழுவின் கலை நிகழ்வு நடைபெறும்.
6) வரவேற்பு குழுவில் இடம் பெற்றுள்ள மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் 16 12 25 அன்று மதியம் ஒரு மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற உள்ள வரவேற்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தங்கள் பயணங்களை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
7) மொழி பெயர்ப்பினை தவிர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
8) மாநாடு துவங்கும் தினத்தன்று மாவட்டங்கள் சார்பாகவும், வரவேற்புக்குழு சார்பாகவும் தீக்கதிர் பத்திரிகையில் விளம்பரங்கள் தருவது. ஆகிய தீர்மானங்களுக்குப் பிறகு, மாநில உதவி பொருளாளர் தோழர் P.சரவணன் நன்றி கூற செயற்குழு இனிதே நிறைவுற்றது.
ஆர். ராஜசேகர்
மாநிலச் செயலாளர்
9.12.25
0 Comments