ஒருங்கிணைப்பு குழுவின் ஒன்றுபட்ட பணி!*
சிறப்பு கருத்தரங்கம், சிறப்பு மாநாடாக மாறியது!!
அனைவருக்கும் தோழமை வாழ்த்துக்கள்!!!
அருமை தோழர்களே! வணக்கம்.
AIBDPA சங்க 5வது அகில இந்திய மாநாட்டை நடத்தும் தமிழ் மாநிலச் சங்கம் சார்பாக, மாநிலம் முழுவதும், மண்டல வாரியாக, நான்கு மையங்களில், சிறப்பு கருத்தரங்கங்கள் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. குன்னுர், கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, வேலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய சிறப்பு கருத்தரங்கம் இன்று (21.11.2025) சேலத்தில் சிறப்பாக நடைபெற்றது.
சேலம் மாவட்டத்தில் கருத்தரங்கத்தை வெற்றிகரமாக நடத்த, BSNLEU - AIBDPA - TNTCWU சங்கங்களின் கூட்டமைப்பு, CoC சார்பாக திட்டமிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டது. சேலம் மாவட்டத்தில் CoC அமைப்பை வழிநடத்தும் மூன்று தலைவர்கள், தோழர்கள் E. கோபால், S. தமிழ்மணி, S. அழகிரிசாமி அவரவருக்கு உண்டான பாணியில், கருத்தரங்கத்தை வெற்றி பெற செய்ய கடுமையாக உழைத்தார்கள். இன்று அதன் வெற்றியை நேரடியாக கண்டோம்.
மாநாட்டிற்கு அழகு படுத்துவதுபோல், கொடிகள், தோரணங்கள், விளம்பரங்கள், கூட்ட அரங்கில் குடிநீர் வசதி, இருக்கைக்கே தேநீர், பலகாரம், மூத்த குடிமக்களுக்கு அசௌகரியம் ஏற்படா வண்ணம், உணவு பரிமாறியது என TNTCWU தோழர்கள் அசத்தினார்கள்.
AIBDPA சங்கம் வேறு BSNLEU சங்கம் வேறு அல்ல என நிரூபிக்கும் விதத்தில், BSNLEU தோழர்கள் பெருமளவு கலந்து கொண்டது பாராட்டுக்குரியது. ஒன்பது கிளைகளில், எட்டு கிளை தோழர்கள், கருத்தரங்கில் கலந்து கொண்டது நல்ல அம்சம். நகர கிளை, GM அலுவலக தோழர்கள் திரளாக கலந்து கொண்டது, குறிப்பாக பெண் தோழர்கள் அணிவகுத்து வந்தது, ஒன்று பட்ட செயல்பாட்டின் வெளிப்பாடு.
அதே போல் சேலம் மாவட்ட AIBDPA தோழர்களும், வாகன ஏற்பாடோடு, கலந்து கொண்டது சிறப்பிலும் சிறப்பு. சற்றேரக்குறைய 350 தோழர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கமாக அமைந்தது மகிழ்வை தந்தது. 1994ல் USWEST நிறுவனத்திற்கு PILOT PROJECT என்கிற முறையில் இந்த 5 மாவட்ட தொலைத்தொடர்பு பணிகளை, தனியாருக்கு தாரை வார்க்க அன்றைய மத்திய அரசு முயன்றபோது, அதை எதிர்த்த அந்த போராட்ட குணாம்சம், சற்றும் குறையாமல், இன்றைய கருத்தரங்கில் உணர முடிந்தது.
அற்புதமான உரை வழங்கிய, AIBDPA உதவி பொதுச் செயலர் தோழர். R. முரளிதரன் நாயர், பாரதி புத்தகாலைய மேலாளர் தோழர். R. பத்ரி, AIBDPA மாநில செயலர் தோழர். R. ராஜசேகர் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்.
கருத்தரங்கில் திரளாக கலந்து கொண்ட வேலூர், தர்மபுரி, ஈரோடு, கோவை, குன்னுர் மாவட்ட தோழர்களுக்கு, நமது செவ்வணக்கங்களை உரித்தாக்குகிறோம். NCCPA, AIBSNLPWA சார்பாக கலந்து கொண்ட தலைவர்களுக்கும், பாராட்டுக்கள்.
கருத்தரங்கத்தை வெற்றிகராமாக்கிய அனைவருக்கும், CoC சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
S. ஹரிஹரன்,
CoC கன்வீனர்






0 Comments